»   »  மனோரமா உடலுக்கு இளையராஜா, நடிகர் அஜீத் அஞ்சலி

மனோரமா உடலுக்கு இளையராஜா, நடிகர் அஜீத் அஞ்சலி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மறைந்த நடிகை மனோரமாவின் உடலுக்கு நடிகர் அஜீத் நேரில் இறுதி அஞ்சலி செலுத்தினார்.

மனோரமாவின் திடீர் மறைவு தமிழ்த் திரையுலகில் மாபெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.இதனால் இன்று நடைபெற இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செயப்பட்டிருக்கின்றன.

Ajith Pays Tribute Manorama Aachi

தமிழ்த் திரையுலகமே திறந்து வந்து ஆச்சியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர், மேலும் ஆச்சியைப் பற்றிய நினைவுகளையும் நடிக, நடிகையர் பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் அஜீத் நேரில் வந்து மனோரமா உடலுக்கு இறுதியஞ்சலி செலுத்தினார். சினிமா உள்ளிட்ட எந்தவொரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாத அஜீத் மனோரமாவின் வீட்டிற்கு சென்று தனது இறுதி அஞ்சலியை செலுத்தியிருக்கிறார்.

Ajith Pays Tribute Manorama Aachi

நடிகர்கள் ரஜினிகாந்த், விஜயகாந்த், விஜய்,விஷால், கார்த்தி, சிவகுமார், சிம்பு, நாசர், பொன்வண்ணன்,ஜெய்,ராமராஜன், பாண்டியராஜன், பார்த்திபன், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Ajith Pays Tribute Manorama Aachi

இளையராஜா

மேலும் சற்றுமுன்னர் இசைஞானி இளையராஜாவும் நேரில் சென்று ஆச்சி மனோரமாவுக்கு இறுதியஞ்சலி செலுத்தினார்.

இன்று மாலை 4 மணிக்கு ஆச்சி மனோரமாவின் இறுதி ஊர்வலம் தொடங்குகிறது. இறுதி ஊர்வலத்தில் திரை நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொள்கின்றனர்.

English summary
Thala Ajith has paid his tribute to Manorama Achi at her residence in Chennai. Manorama has acted in more than 1,200 films and 1,000 plays. She set a Guinness record when she completed 1,000 films.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil