»   »  ஷாம்லியிடம் சான்ஸ் கேட்ட அஜித்... போட்டோஷூட் நடத்த பாஸ்!

ஷாம்லியிடம் சான்ஸ் கேட்ட அஜித்... போட்டோஷூட் நடத்த பாஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பேபியாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த ஷாமிலி தற்போது தமிழில் நாயகியாக ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கவுள்ளார்.

சித்தார்த்துடன் தெலுங்கில் அவர் நடித்த முதல்படம் சொல்லிக் கொள்வது போல் அமையவில்லை. அதனைத் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் சினிமாவில் இருந்து விலகி இருந்தவர், தற்போது மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ளார். தனுஷுடன் ஒரு படம், விக்ரம் பிரபுவுடன் ஒரு படம் என இரண்டு படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில், ஷாமிலி மீண்டும் நடிக்கப் போகிறார் எனத் தெரிந்ததும், அஜித் அவரிடம் சென்று சான்ஸ் கேட்டாராம். வேறு எதற்கு போட்டோஷூட் நடத்தத்தான்.

பேஸ்புக் பக்கத்தில்...

பேஸ்புக் பக்கத்தில்...

தற்போது அஜித் கிளிக்கிய ஷாம்லியின் புகைப்படங்கள் தான் அவரது பேஸ்புக் பக்கத்தில் பரபரப்பாக வலம் வந்து கொண்டிருக்கிறது. அதைப் பார்த்து ஷாம்லியின் அழகைப் புகழ்பவர்கள் ஒரு பக்கம் என்றால், அஜித்தை பாராட்டுபவர்கள் மற்றொரு பக்கம்.

போட்டோகிராபி...

போட்டோகிராபி...

அஜித்திற்கு நடிப்பைப் போலவே பைக் ரேஸூம், போட்டோகிராபியும் மற்றொரு கண்கள் என்றால் மிகையில்லை. சமீபத்தில் அப்புக்குட்டி, அதனைத் தொடர்ந்து ஸ்ருதி என போட்டோஷூட் நடத்தியவர், தற்போது அழகு ஷாம்லியை இன்னும் அழகாக போட்டோ எடுத்துள்ளார்.

போட்டோஷூட்...

போட்டோஷூட்...

ஷாம்லி மீண்டும் நடிக்கப் போகிறார் என்ற தகவல் கிடைத்ததும், அவரிடம் சென்று, "நான் ஒரு போட்டோஷூட் எடுக்கலாமா?" என ஆர்வமாக கேட்டாராம் அஜித். கரும்பு தின்னக் கூலியா? என மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்து ஓகே சொல்லிவிட்டாராம் ஷாமிலி.

ஷாலினியின் பங்கு...

ஷாலினியின் பங்கு...

அஜித்தின் இந்த போட்டோஷூட்டிற்கு மேக்கப், டிரஸ் என எல்லா விஷயமும் ஷாலினி பார்த்து பார்த்து செய்தாராம்.

ஓவர் டிரில்...

ஓவர் டிரில்...

லுக்ஸ் எங்கே இருக்கணும், காஸ்ட்யூம்ஸ் எப்படி இருக்கணும், ஓவர் மேக்கப் கூடாது, ஹெர் கலரிங், கர்லிங் தவிர்க்கணும்னு ஷாம்லியை இந்த போட்டோஷூட்டிற்காக ஓவர் டிரில் வாங்கினாராம் அஜித்.

டாஸ்க் மாஸ்டர்...

டாஸ்க் மாஸ்டர்...

ஒரு சின்ன பார்வை, சின்ன சிரிப்புக்குக் கூட அவ்வளவு பர்பெக்‌ஷன் வேண்டும் என எதிர்பார்ப்பாராம் அஜித். போட்டோகிராபி என வந்துவிட்டால் அஜித் டாஸ்க் மாஸ்டர் என்கிறார் ஷாமிலி.

அழகு பாட்டி...

அழகு பாட்டி...

நடிகர், நடிகைகளை மட்டும் தான் என்றில்லை, சமீபத்தில் அவரது குடும்ப நண்பரான சுஹாசினி என்கிற தொண்ணூறு வயது பாட்டியை கலக்கலாக போட்டோ எடுத்துக் கொடுத்து அசத்தி விட்டாராம் அஜித்.

English summary
Actor Ajith did a photo shoot for his wife Shalini's sister shamlee.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil