»   »  'தல 57' படத்தில் அஜீத் ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்'?

'தல 57' படத்தில் அஜீத் ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்'?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தல 57 படத்தில் அஜீத் இரட்டை வேடங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் படம் தல 57. இன்டர்போல் ஏஜெண்டாக நடிக்கும் அஜீத்தின் மனைவியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். கமல் ஹாஸனின் இளைய மகள் அக்ஷரா அஜீத்தின் உதவியாளராக நடிக்கிறார்.

Ajith to play dual role in Thala 57?

தமிழ்நாட்டில் நடக்கும் கொலையை விசாரிக்க அஜீத் பல நாடுகளுக்கு செல்கிறார். முதல்கட்ட படப்பிடிப்பு ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்றது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடக்கிறது.

இந்நிலையில் தல 57 படத்தில் அஜீத் இரட்டை வேடங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை சிவா உறுதிப்படுத்தவில்லை. துப்பறியும் கதையில் அஜீத் இரண்டு வேடங்களிலா? மற்றொரு அஜீத் என்னவாக இருப்பார் என்பது தெரியவில்லை.

சிவா அறிவிக்கும் வரை காத்திருப்பதை தவிர வேறு வழியில்லை.

English summary
According to reports, Ajith plays dual role in his upcoming movie Thala 57 being directed by Siva.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil