»   »  அஜீத்தும், ரஜினியும் ஏன் பெரிய ஸ்டாராக இருக்காங்க தெரியுமா?: நயன்தாரா கொடுத்த சூப்பர் விளக்கம்

அஜீத்தும், ரஜினியும் ஏன் பெரிய ஸ்டாராக இருக்காங்க தெரியுமா?: நயன்தாரா கொடுத்த சூப்பர் விளக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
தன்ஷிகாவை பார்த்து சிரித்த கிருஷ்ணா, விதார்த்-வீடியோ

சென்னை: பெண்கள் பேச வந்தாலே எழுந்து நிற்கும் பண்பு அஜீத், ரஜினியிடம் உள்ளது என்று நயன்தாரா தெரிவித்துள்ளார்.

கோலிவுட்டுக்கு வந்த வேகத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்தவர் நயன்தாரா. மேலும் அஜீத்துடன் சேர்ந்து பில்லா, ஏகன், ஆரம்பம் ஆகிய படங்களில் நடித்துள்ளார் நயன்தாரா.

இந்நிலையில் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நயன் தல, சூப்பர் ஸ்டாரை புகழ்ந்து பேசியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது,

அஜீத்

அஜீத்

எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த நடிகர் அஜீத். அவருடன் சேர்ந்து பணியாற்றுவது மிகவும் சவுகரியமாக இருக்கும். அவர் ஃபேக்காகவே இருக்க மாட்டார். ரியலாக இருப்பார்.

பில்லா

பில்லா

பில்லா படத்தில் நடித்தபோது நான் பெரிய ஆள் கிடையாது. சாதாரண நபர். அஜீத் எனும் பெரிய ஸ்டாருடன் நடிக்கிறோம் என்ற எண்ணம் வராமல் பார்த்துக் கொண்டார். என்னை சமமாக நடத்தினார்.

ரஜினி

ரஜினி

அஜீத்தும், ரஜினிகாந்தும் ஏன் பெரிய ஸ்டார்களாக உள்ளார்கள் என்றால் அவர்கள் இருவருமே மிகவும் பணிவானவர்கள், மற்றவர்களை மதித்து நடப்பவர்கள்.

பெண்கள்

பெண்கள்

பெண்களுக்கு மரியாதை கொடுப்பவர்கள் அஜீத், ரஜினி. யாராவது பெண் தங்களிடம் பேச வந்தால் அஜீத்தும் சரி, ரஜினியும் சரி உட்கார்ந்து கொண்டே பேச மாட்டார்கள். எழுந்து நின்று பேசுவார்கள். ஆண்களிடம் அந்த குணத்தை பார்ப்பது அரிது. இந்த விஷயத்தில் அவர்களை அடிச்சுக்க ஆளே இல்லை என்றார் நயன்தாரா.

English summary
Nayanthara said that Ajith and Rajinikanth are big stars as they are very humble and down to earth personalities.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil