»   »  'அம்மா'வின் மரண செய்தியறிந்து பதறிப்போய் வந்த அஜீத் பல்கேரியா கிளம்புகிறார்

'அம்மா'வின் மரண செய்தியறிந்து பதறிப்போய் வந்த அஜீத் பல்கேரியா கிளம்புகிறார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயலலிதாவின் மரண செய்தி அறிந்ததுமே அஜீத் அடுத்த ஃபிளைட்டை பிடித்து சென்னை வந்தார். இந்நிலையில் அவர் பல்கேரியாவுக்கு கிளம்ப உள்ளார்.

அஜீத் சிறுத்தை சிவா இயக்கத்தில் தல 57 படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு தற்போது பல்கேரியாவில் நடந்து வருகிறது. கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் படக்குழுவினர் பணியாற்றி வருகிறார்கள்.

இந்நிலையில் தான் ஜெயலலிதா இறந்த செய்தி அஜீத்துக்கு தெரிய வந்தது.

அஜீத்

அஜீத்

ஜெயலலிதா உயிர் இழந்த செய்தியை கேட்டதும் அஜீத் அடுத்த ஃபிளைட்டை பிடித்து சென்னைக்கு கிளம்பினார். இருப்பினும் அவரால் இறுதிச் சடங்கு முடிவதற்குள் சென்னை வந்தடைய முடியவில்லை.

அஞ்சலி

அஞ்சலி

இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முடியாத வருத்தம் இருந்தாலும் இன்று அதிகாலை முதல் வேலையாக அம்மாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார் அஜீத்.

சோ

சோ

மறைந்த பத்திரிகையாளர் சோ ராமசாமியின் உடலுக்கும் அஜீத் முதல் ஆளாக அஞ்சலி செலுத்தினார். அவருடன் மனைவி ஷாலினியும் வந்திருந்தார்.

பல்கேரியா

பல்கேரியா

அம்மாவுக்காக சென்னைக்கு வந்த அஜீத் மீண்டும் பல்கேரியாவுக்கு கிளம்புகிறார். சண்டைக் காட்சிகளில் நீங்களே நடித்து ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று ஜெயலலிதா அஜீத்துக்கு அறிவுரை சொல்லும் அளவுக்கு அவர் மீது பாசம் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Ajith Kumar who came all the way from Bulgaria to Chennai to pay homage to Amma is set to return.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos