என்ன இப்படி சொல்றீங்க...ஏகே 61 ஷுட்டிங் அதுக்குல முடிஞ்சுடுச்சா...பக்கா பிளானா இருக்கே
சென்னை : அஜித் நடித்து வரும் ஏகே 61 படத்தின் ஷுட்டிங் பற்றி வெளியாகி உள்ள லேட்டஸ்ட் அப்டேட் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. சத்தமே இல்லாமல் இப்படி பக்கா பிளான் போட்டிருக்காங்களே என கேட்டு வருகின்றனர்.
வலிமை படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து ஹெச்.வினோத், போனி கபூர், அஜித் குமார் மீண்டும் இணைந்துள்ள படம் ஏகே 61. இந்த படத்தின் ஷுட்டிங் கிட்டதட்ட இரண்டு மாதங்களாக ஐதராபாத்தில் இந்த ஷுட்டிங் நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து வருகிறார்.

வீடியோ லீக் ஆகிடுச்சா
மிகுந்த பாதுகாப்புடன் ஷுட்டிங் நடத்தப்பட்டு வருவதால் ஒரு சின்ன விஷயம் கூட வெளியில் கசியாமல் பாதுகாத்து வைத்திருந்தனர். இந்நிலையில் படத்தின் செட் பற்றிய வீடியோ தற்போது லீக்காகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ஷுட்டிங் ஸ்பாட்டில் பாதுகாப்பை இன்னும் பலப்படுத்த வினோத் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

முழு பிளானும் வந்தாச்சு
இதற்கிடையில் ஏர்போர்ட்டில் அஜித் அடிக்கடி அங்குள்ள ஊழியர்களுடன் இணைந்து எடுத்துக் கொண்ட போட்டோக்கள் வெளியாகி அனைவரின் எதிர்பார்ப்பையும் தூண்டி வருகிறது. இந்த சமயத்தில் படத்தின் ஷுட்டிங் பற்றிய முழு பிளானும் தற்போது வெளியாகி உள்ளது. இதனை கேட்டு அனைவரும் ஆச்சரியமாக, உண்மை தானா என கேட்டு வருகின்றனர்.

செம பிளானா இருக்கே
லேட்டஸ்ட் தகவலின் படி, ஐதராபாத்தில் நடைபெற்று வந்த முதல் கட்ட ஷுட்டிங் இன்றுடன் நிறைவடைந்து விட்டதாம். ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் கடந்த 51 நாட்களாக இரவு, பகலாக நடந்து வந்த ஷுட்டிங் முடிவுக்கு வந்துள்ளதாம். சென்னை மவுண்ட் ரோடு போன்று அமைக்கப்பட்ட செட்டிலேயே இதுவரை ஷுட்டிங் நடத்தப்பட்டு வந்தது. இந்த செட்டில் கடந்த சில நாட்களாக அஜித் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் நடித்து வந்த சீன்கள் எடுக்கப்பட்டு வந்துள்ளது.

அட சென்னையிலையும் இருக்கா
ஏகே 61 படத்தின் இரண்டாம் கட்ட ஷுட்டிங் புனே நகரில் ஜுன் மாத மத்தியில் துவங்கப்பட உள்ளதாம். இதற்காக அங்கு புதிய செட் அமைக்கப்பட உள்ளதாம். அதை முடித்த பிறகு இறுதிக்கட்ட ஷுட்டிங் சென்னையில் நடத்தப்பட உள்ளதாம். புனேயில் நடைபெற உள்ள இரண்டாம் கட்ட ஷுட்டிங்கில் மஞ்சு வாரியர் கலந்து கொள்ள போகிறாராம்.

ஷுட்டிங் முடிந்து விட்டதா
தீபாவளி ரிலீசுக்கு பிளான் செய்திருப்பதால் ஏகே 61 ஷுட்டிங் படு சுறுசுறுப்பாக நடந்து வருகிறதாம். தற்போது வரை 90 சதவீதம் ஷுட்டிங் முடிக்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. மீதமுள்ள 10 சதவீதம் ஷுட்டிங் விரைவில் முடிக்கப்பட உள்ளதாம். விரைவில் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியிடப்பட உள்ளதாம்.


Click it and Unblock the Notifications











