வினோத் ப்ரோ... ஏகே 61 டைட்டிலை எப்போ வெளியிடுவீங்க...கெஞ்சும் ரசிகர்கள்
சென்னை : அஜித் நடித்து வரும் ஏகே 61 படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக்கை எப்போது வெளியிட போகிறீர்கள் என டைரக்டர் ஹெச்.வினோத்திடம் அஜித் ரசிகர்கள் கேட்க துவங்கி விட்டனர். டைட்டில் என்னவாக இருக்கும் என தெரிந்து கொள்ள ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ரைடக்டர் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் மூன்றாவதாக நடிக்கும் படம் ஏகே 61. நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றியை தொடர்ந்து போனி கபூர் தயாரிப்பில் ஏகே 61 படம் தயாராகி வருகிறது.
ஏப்ரல் மாதம் துவங்கி ஐதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட சென்னை மவுண்ட் ரோடு வங்கி போன்ற செட்டில் ஷுட்டிங் நடைபெற்று வந்தது. முதல் கட்ட ஷுட்டிங் 47 நாட்கள் இரவு, பகலாக நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து சிறிது பிரேக்கிற்கு பிறகு இரண்டாம் கட்ட ஷுட்டிங் துவங்கப்பட்டுள்ளது.

80 சதவீதம் ஷுட்டிங் ஓவர்
வங்கிக் கொள்ளையை மையமாகக் கொண்ட ஏகே 61 படத்தின் இரண்டாம் கட்ட ஷுட்டிங் புனேயில் நேற்று துவங்கி நடந்து வருகிறது. இங்கு மற்றொரு செட்டில் இரண்டாம் கட்ட ஷுட்டிங் நடைபெறுகிறது. இதுவும் உண்மை சம்பவத்தின் அடிப்படையிலான கதை என்று சொல்லப்படுகிறது. ஏற்கனவே படத்தில் 80 சதவீத வேலைகள் முடிந்து விட்டதாகவும், இன்னும் 10 முதல் 15 நாட்கள் வரையிலான ஷுட்டிங் மட்டுமே மீதமிருப்பதாக கூறப்படுகிறது.

தீபாவளி ரிலீஸ் கன்ஃபார்ம்
ஏகே 61 படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. இதனால் படத்தின் வேலைகள் படு சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தில் பாடல்கள் ஏதும் இல்லாததால் இரண்டு தீம் டிராக் மட்டும் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏகே 61 படத்திற்காக மிரட்டலான இசையை ஜிப்ரான் உருவாக்கி இருப்பதாக கூறப்படுகிறது.

மறுபடியும் ஏமாத்திட்டிங்களே
ஏகே 61 ஷுட்டிங் இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டதால் படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக்கை எப்போது வெளியிட போகிறார்கள் என ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அஜித்தின் பிறந்தநாளான மே 1 ம் தேதியே ஏகே 61 ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடுவார்கள் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே கிடைத்தது.

வலிமை நிலைமை தானா ஏகே 61 க்கும்
படத்தின் ஷுட்டிங்கே முடிக்க போகிறார்கள். தீபாவளி ரிலீஸ் என்று வேறு சொல்லப்படுவதால் இதுவரை ஃபர்ஸ்ட் லுக், டைட்டில் என எதையும் வெளியிடாமல் இருக்கிறார்கள். இதனால் வலிமை படத்தை போல் ஏகே 61 படமும் ஆகி விடுமோ என்ற அச்சம் ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது. வலிமை படத்தை போல் ஏகே 61 படத்திற்கும் தொடர்ந்து அப்டேட் கேட்க வேண்டுமா என்று பலரும் கேட்டு வருகின்றனர்.

டைட்டில் எப்போ ப்ரோ வெளியிடுவீங்க
இதற்கிடையில் விஜய் நடித்துக் கொண்டிருக்கும் தளபதி 66 படத்தின் டைட்டில் பற்றிய தகவல் கசிந்துள்ளதாலும், விஜய்யின் பிறந்தநாளில் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுவதாலும் அஜித் ரசிகர்கள் செம டென்ஷனாகி உள்ளனர். இதனால் ஏகே 61 டைட்டிலை எப்போ வெளியிடுவீங்க என ரசிகர்கள் டைரக்டர் ஹெச்.வினோத்திடம் கேட்க துவங்கி விட்டனர்.

அஜித் போட்டோ வருது அப்டேட் வரலியே
பொங்கலுக்கு ரிலீசாக போகிற படத்திற்கே அதுக்குல டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் வெளியிட போவதாக சொல்கிறார்கள். ஆனால் நீங்க தீபாவளி ரிலீஸ் என சொல்லி விட்டு, இப்போ வரை ஒரு அப்டேட் கூட வெளியிடாமல் வைத்துள்ளீர்கள். அஜித் அவ்வப்போது ஏர்போர்ட்டிற்கு வரும் போது எடுக்கப்படும் வீடியோக்கள், போட்டோக்கள், ரசிகர்களுடன் எடுக்கும் செல்ஃபி மட்டுமே வெளியே வருகிறது. மற்ற அனைத்தையும் படு ரகசியமாக வைத்துள்ளீர்களே என கேட்டு வருகின்றனர்.
Recommended Video

இது தான் பிளானா
இந்நிலையில் லேட்டஸ்ட் தகவலாக, ரசிகர்கள் தொடர்ந்து ஏகே 61 படத்திற்கும் அப்டேட் கேட்க துவங்கி விட்டதால் அடுத்த மாதம், அதாவது ஜுலை மாதத்தில் ஏகே 61 படத்தின் டைட்டிலை வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. படத்தின் ஷுட்டிங் முழுவதும் முடிந்த பிறகு, போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகளுடன், அடுத்தடுத்த அப்டேட்களை வெளியிட படக்குழு தீர்மானித்திருப்பதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











