மீண்டும் ஐதராபாத் திரும்பிய ஏகே 61 டீம்...என்ன சீன் எடுக்குறாங்க தெரியுமா?

சென்னை : அஜித், ஹெச்.வினோத் மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் ஏகே 61. போனி கபூர் இந்த படத்தை தயாரிக்கிறார். ஜிப்ரான் இமையமைக்கிறார்.

Recommended Video

AjithKumar | எதிரே வந்த பெண், Thala செய்த காரியம்! நெகிழும் ரசிகர்கள் *Kollywood | Filmibeat Tamil

இந்த படத்தில் வீரா, அஜய், ஜான் கொக்கன், சமுத்திரக்கனி, மகாநதி ஷங்கர் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

ஐதராபாத்தில் துவங்கிய இந்த படத்தின் ஷுட்டிங் ஒரு மாதத்திற்கும் அதிகமாக நடந்தது. பிறகு புனேயில் ஷுட்டிங் நடக்கிறது என சொல்லப்பட்ட நிலையில் விசாகப்பட்டினத்தில் நடத்தப்பட்டது. வலிமை படத்தில் க்ளீன் சேவ் ஆக நடித்த அஜித், ஏகே61 படத்தில் நீண்ட தாடியுடன் நடித்து வருகிறார்.

வைரலான அஜித் போட்டோ

வைரலான அஜித் போட்டோ

ஒரு மாத இடைவேளைக்கு பிறகு துவங்கிய ஏகே 61 ஷுட்டிங்கில் கலந்து கொள்வதற்காக அஜித், விசாகப்பட்டினம் சென்ற போட்டோக்கள், ஏர்போர்ட் பஸ்சில் மிக எளிமையாக பயணிகளுடன் பயணம் செய்த வீடியோக்கள் உள்ளிட்டவைகள் வைரலாகின.

 இப்போ என்ன சீன் எடுக்குறாங்க

இப்போ என்ன சீன் எடுக்குறாங்க

விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு வார ஷுட்டிங் முடிவடைந்ததும், அடுத்த கட்ட ஷுட்டிங் ஐதராபாத்தில் மீண்டும் துவங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐதராபாத்தில் நடக்க உள்ள ஷுட்டிங்கில் அஜித்துடன் இணைந்து மஞ்சு வாரியர் நடிக்கும் சீன்கள் தான் எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஷுட்டிங் எப்போ முடியும்

ஷுட்டிங் எப்போ முடியும்

ஏற்கனவே சமுத்திரக்கனி - அஜித் இணைந்து நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. தற்போது மஞ்சு வாரியருடன் அஜித் நடிக்கும் காட்சிகள் இறுதிக்கட்ட ஷுட்டிங்காக இருக்கலாம் என சொல்லப்படுகிறது. செப்டம்பர் மாதத்தில் ஏகே 61 ஷுட்டிங் முழுவதும் நிறைவடையும் என சொல்லப்படுகிறது.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போ வரும்

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போ வரும்

செப்டம்பர் முதல் வாரத்தில் ஏகே 61 படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் இந்த ஆண்டு தீபாவளிக்கு தான் ஏகே 61 படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. ஷுட்டிங் தாமதமாகி வருவதால் படத்தின் ரிலீஸ் தேதி தாமதமாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X