அஜித்தின் ரியல் கெத்து… ட்ரெண்டாகும் தாய்லாந்தின் த்ரில்லிங்கான பைக் ட்ரிப் போட்டோஸ்
தாய்லாந்து: அஜித் தற்போது ஹெச் வினோத் இயக்கும் துணிவு படத்தில் பிசியாக நடித்து வருகிறார்.
துணிவு படத்தின் ஷூட்டிங் கடந்த சில நாட்களாக தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது.
துணிவு ஷூட்டிங் ஸ்பாட்டில் அஜித் ரியலாக ரேஸ் பைக் ஓட்டி கெத்து காட்டியுள்ளது வைரலாகியுள்ளது.

துணிவு ஷூட்டிங் ஸ்பாட்
அஜித் நடித்துவரும் துணிவு படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது. ஹெச் வினோத் இயக்கும் இந்தப் படத்தில் அஜித்துடன் மஞ்சு வாரியர், பிக்பாஸ் அமீர், பவானி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். மூன்றாவது முறையாக அஜித் - ஹெச் வினோத் கூட்டணி வைத்துள்ளதால், இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. வங்கிக் கொள்ளையை பின்னணியாக வைத்து இந்தப் படம் உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது.

பொங்கல் ரிலீஸ்
தாய்லாந்தில் நடைபெற்று வரும் ஷூட்டிங்குடன் துணிவு படப்பிடிப்பு நிறைவு பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்தப் படம் பொங்கலை முன்னிட்டு அடுத்தாண்டு ஜனவரி 12ம் தேதி வியாழக்கிழமை வெளியாகும் என கூறப்படுகிறது. விஜய்யின் வாரிசு திரைப்படம், ஒருநாள் முன்னதாக ஜனவரி 11ம் தேதி புதன்கிழமை வெளியாகிறது. பல வருடங்களுக்குப் பிறகு விஜய் - அஜித் படங்கள் பொங்கலுக்கு களமிறங்குவது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்ஸாக அமைந்துள்ளது.

ரியல் கெத்து
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் அஜித்தின் வாட்ஸ அப் டிபியில் கார் ரேஸில் பங்கேற்றபோது எடுக்கப்பட்ட போட்டோ இருந்தது ட்ரெண்ட் ஆனது. அஜித் ரேஸ் பிரியர் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான் என்றாலும், இப்போது தாய்லாந்தில் துணிவு ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வெளியான போட்டோஸ் சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகின்றன. ரேஸ் பைக்கில் அஜித்தில் அட்வென்டர் ட்ரிப் அடிக்கும் அந்த போட்டோக்களை ரசிகர்களும் அதிகம் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

எகிறும் எதிர்பார்ப்பு
துணிவு திரைப்படம் ஷூட்டிங் ஆரம்பம் ஆனதில் இருந்தே அஜித் அடிக்கடி பைக் ட்ரிப் செய்து வருகிறார். இந்தியா மட்டும் இல்லாமல் உலகின் பல நாடுகளிலும் ஜாலியாக டூர் அடித்து வருகிறார். இந்தப் புகைப்படங்கள் தொடர்ந்து வைரலாகி வந்ததை பார்க்க முடிந்தது. இந்நிலையில், தற்போது தாய்லாந்தில் இருந்து வெளியான புகைப்படங்கள், அஜித் தனியாக சாகசம் செய்த புகைப்படங்களா இல்லை துணிவு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வெளியானதா என தெரியவில்லை. இதனால், துணிவு படத்திலும் தரமான பைக் ஸ்டண்ட் காட்சிகள் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











