அஜித் இயக்குநரின் அடுத்த படம் எப்போ ரிலீஸ்?

By Vignesh Selvaraj

சென்னை : அஜித்தை வைத்து 'காதல் மன்னன்', 'அமர்க்களம்', 'அட்டகாசம்', 'அசல்' ஆகிய படங்களை இயக்கியவர் சரண். அஜித்தை வைத்து அதிக படங்களை இயக்கியவரும் இவர்தான்.

இடையில் 'ஜெமினி', 'வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் போன் வெற்றிப் படங்களையும் கொடுத்தார் இயக்குநர் சரண்.

'இதயத் திருடன்', 'வட்டாரம்', 'மோதி விளையாடு', 'அசல்' படங்களின் தோல்வியால் அடுத்து வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தார்.

தானே தயாரித்து இயக்கம் :

தானே தயாரித்து இயக்கம் :

சிறிய இடைவெளிக்குப் பிறகு 'ஆயிரத்தில் இருவர்' என்ற படத்தை தானே தயாரித்து இயக்கினார். இந்தப் படத்தில் வினய்யுடன் சமுத்ரிகா, ஸ்வாஸ்திகா என்ற இரு புதுமுகங்கள் நடித்துள்ளனர். பரத்வாஜ் இசை அமைத்திருக்கிறார்.

பொருளாதாரச் சிக்கல் :

பொருளாதாரச் சிக்கல் :

மிகுந்த பொருளாதாரச் சிக்கல்களுக்கு இடையே 'ஆயிரத்தில் இருவர்' படத்தை சிரமப்பட்டு முடித்தார் சரண். படம் முடிந்தும் வெளியிட முடியாமல் தவித்து வந்தார்.

வினய்யால் வெளியீடு :

வினய்யால் வெளியீடு :

இந்தப் படத்தின் நாயகன் வினய் வில்லனாக நடித்த 'துப்பறிவாளன்' படம் நல்ல வரவேற்பை பெற்றிருப்பதாலும், அதில் வினய்யின் நடிப்பு பேசப்படுவதாலும் இந்தச் சூழலில் படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறார் சரண்.

22-ம் தேதி ரிலீஸ் :

22-ம் தேதி ரிலீஸ் :

வருகிற 22-ம் தேதி படம் வெளிவருவதாக அறிவித்திருக்கிறார். ஏற்கெனவே இரண்டு முறை 'ஆயிரத்தில் இருவர்' வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு தள்ளிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X