»   »  மருத்துவமனைக்கு வந்து விஜய் சந்தித்தாரா? அஜீத் தரப்பு விளக்கம்!

மருத்துவமனைக்கு வந்து விஜய் சந்தித்தாரா? அஜீத் தரப்பு விளக்கம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: காலில் ஆபரேஷன் செய்து கொண்ட அஜீத்தை, நேரில் சந்தித்து விஜய் நலம் விசாரித்ததாக வந்த செய்தி மற்றும் படங்களுக்கு விளக்கம் தெரிவித்துள்ளது அஜீத் தரப்பு.

ஆரம்பம் படத்தில் நடித்தபோது அஜீத்தின் காலில் அடிபட்டது. ஆனால் அதைப் பெரிதுபடுத்தாமல், தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார் அஜீத். வேதாளம் படப்பிடிப்பின்போது வலி அதிகமானதால் அறுவைச் சிகிச்சை செய்தார்.

Ajith's explanation on his meet with Vijay

டாக்டர்கள் அவரை 8 வார காலம் ஓய்வெடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், மருத்துவமனையில் அஜீத் இருந்தபோது, நடிகர் விஜய் அவரை நேரில் சென்று சந்தித்ததாக செய்தி பரவியது. மருத்துவமனை டாக்டருடன் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் இணையதளங்களில் பரவின.

இதுகுறித்து அஜீத் தரப்பில் ஒரு விளக்கம் அளித்துள்ளனர். அதில், கடந்த 2 வருடங்களுக்கு முன்பு சென்னையில் ஒரு மருத்துவமனை திறந்தபோது அஜீத், விஜய் இருவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த மருத்துவமனையை பார்க்க விஜய் காலையிலும், அஜீத் மாலையிலும் சென்றனர்.

மருத்துவமனைக்குச் சொந்தக்காரரான டாக்டர் தனித்தனியாக இருவருடனும் அப்போது படம் எடுத்துக் கொண்டுள்ளார். அந்தப் படங்கள்தான் இணையதளத்தில் வெளியாகியுள்ளன. இதை வைத்து அஜீத்தை தற்போது விஜய் சந்தித்துள்ளதாக தவறான தகவல்கள் பரவியுள்ளன," என்று தெரிவித்தனர்.

English summary
Ajith, who has undergone leg operation has denied media reports saying that actor Vijay was met him at hospital.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil