»   »  அஜீத் பற்றி கமெண்ட்... ஜி.வி. பிரகாஷை வச்சு செய்யும் அஜீத் ரசிகர்கள்

அஜீத் பற்றி கமெண்ட்... ஜி.வி. பிரகாஷை வச்சு செய்யும் அஜீத் ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: டுவிட்டரில் அஜீத் ரசிகர்களும், விஜய் ரசிகர்களும்தான் மோதிக்கொள்வார்கள். ஆனால் இப்போதோ பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷை , தாளித்து வருகின்றனர் அஜீத் ரசிகர்கள்.

விஜய் பிறந்தநாளுக்கு, சந்தேகமேயில்லை அடுத்த சூப்பர்ஸ்டார் இளையதளபதி தான் என பிறந்தநாள் வாழ்த்து கூறி, ரஜினி ரசிகர்களிடம் சிக்கிக் கொண்ட ஜி.வி.பிரகாஷ் தற்போது அஜீத் ரசிகர்களிடம் சிக்கி வறுபட்டார்.

Ajith's fans angry on G.V.prakash's comment Like Us On Facebook

சமீபத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' படம் வெளியானது. இதனையடுத்து, அஜித் ரசிகர் ஒருவர் 'நீங்கள் இளைஞர்களுக்கு தவறான உதாரணம்' என கூறியதில் கோபமடைந்த ஜி.வி.பிரகாஷ் பதிலுக்கு அஜீத் பற்றி டுவீட் போட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

ஜி.வி.பிரகாஷ் தனது பதிவில் ,'முதலில் உங்கள் நடிகரை குடி, போதை இல்லாமல் நடிக்க சொல்லுங்கள், உங்களை போன்ற ரசிகரால் தான் அவருக்கு கெட்டப்பெயர், பலரும் வெறுக்கிறார்கள். இதை அவரே விரும்பமாட்டார்' என கூறியிருந்தார்.

இதனால் கடும் கோபமடைந்த அஜீத் ரசிகர்கள் டுவிட்டரில் ஜி.வி.பிரகாஷை கடுமையாக தாக்கி பதிவிட்டனர். இந்நிலையில், ஜி.வி.பிரகாஷ் தனது அனைத்து பதிவுகளையும் அழித்துவிட்டாராம்.

அஜீத் ரசிகர்கள் சாதாரணமாகவே போட்டு தாளிப்பார்கள். இதுபோன்ற சர்ச்சையில் சின்மயி சிக்கினார். மாதவன் 'தல ஆவணி அவிட்டம்'

டுவிட்டிற்கு பதில் பதிவு போடப் போய் வசமாக சிக்கினார்.

இப்போது ஜி.வி.பிரகாஷ் வகையாக அஜீத் ரசிகர்களிடம் சிக்கிக்கொண்டு சமூகவலைத்தளங்களில் வறுபட்டு வருகிறார்.

English summary
Ajith's fans angry on G.V.prakash's comment Like Us On Facebook.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil