twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அஜித் - சிவா - சத்யஜோதி கூட்டணியில் புதிய படம்... அதிருப்தியில் விநியோகஸ்தர்கள்?

    By Shankar
    |

    இந்த வருடம் வெளியான படங்களில் பாக்ஸ் ஆபீஸில் பைரவா, விவேகம், சிங்கம் - 3, மெர்சல் ஆகியவை தியேட்டர்களுக்கு வசூலை வாரிக் கொடுக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட படங்கள்.

    பைரவா, விவேகம், சிங்கம் - 3 படங்கள் நஷ்டத்தை ஏற்படுத்திவிட்டன. மெர்சல் மட்டும் பாரதிய ஜனதா புண்ணியத்தில் கல்லா கட்டி முடித்திருக்கிறது.

    அஜித்- சிவா கூட்டணி இணையும் அடுத்த படத்தை விவேகம் படத்தை தயாரித்த சத்யஜோதி நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியான நாள் முதல் விநியோகஸ்தர்களும், தியேட்டர் உரிமையாளர்களும் கலகக் குரல் எழுப்பத் தயாராகி வருகின்றனர்.

    மூன்று படங்கள்

    மூன்று படங்கள்

    அஜித் குமார் நடித்து வெளியான வீரம், வேதாளம் இரு படங்களையும் இயக்கியவர் சிவா. தமிழகத்தில் வேதாளம், வீரம் இரு படங்களும் தலா சுமார் 40 கோடி ரூபாய் அளவுக்கு ஷேர் வந்த படங்கள். விநியோகஸ்தர், தியேட்டர் உரிமையாளர்கள் இப்படங்களுக்கு முதலீடு செய்த தொகை தலா 50 கோடி. படத்தை தயாரித்த ஏஎம் ரத்னம், விஜயா வாஹினி இருவருக்கும் படம் ரீலீஸ் அன்றே படத்தின் தயாரிப்பு செலவைவிட குறைவான விலையில் வியாபாரம் செய்து நஷ்டத்தை சந்தித்தனர்.

    அதிக பட்ஜெட்

    அதிக பட்ஜெட்

    கடந்த இருபடங்களின் வசூலைக் கவனத்தில் கொள்ளாமல் விவேகம் படத்திற்கு அதிக பட்ஜெட் போட்டனர். அஜித்துக்கும் முந்தைய படங்களை விட அதிக சம்பளம். முதல் இரு படங்களின் இயக்குநர் சிவாவையே விவேகம் படத்துக்கும் இயக்குநராக்கினார்.

    திட்டமிட்ட பட்ஜெட்டை காட்டிலும் பல கோடி வரை விவேகம் படத்திற்கு செலவு செய்யப்பட்டது. தயாரிப்பாளரை பொறுத்தவரை விவேகம் அவுட் ரேட் அடிப்படையில் ரூ 120 கோடி வரை வியாபாரம் செய்யப்பட்டது.

    விவேகம் ரிசல்ட்

    விவேகம் ரிசல்ட்

    போட்டிக்கு படம் இன்றி தனித்து தமிழகத்தில் ரீலீஸ் செய்யப்பட்ட விவேகம் முதல் வாரத்திலேயே வசூலில் முடங்கிப் போனது. முதல் மூன்று நாட்களில் அதிக விலைக்கு டிக்கட் விற்பனை, ரசிகர் மன்ற சிறப்புக் காட்சிகள் மூலம் தியேட்டர்கள் கல்லா கட்டினாலும் கொடுத்த முதலீட்டை வசூல் மூலம் எடுக்க முடியவில்லை.

    தமிழக தியேட்டர் உரிமை சுமார் 55 கோடி ரூபாய்க்கு விவேகம் வியாபாரம் செய்யப்பட்டிருந்தது. இதில் கேளிக்கை வரி, தியேட்டர் ஷேர் கழித்து சுமார் 40 கோடி ரூபாய் வரை ஷேர் கிடைத்துள்ளது.

    அதிர்ச்சி

    அதிர்ச்சி

    விவேகம் படத்தின் கோவை, திருச்சி, சேலம், திருநெல்வேலி ஏரியா உரிமை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகக் கூறுகிறார்கள். இந்த நிலையில்தான் சிவா - அஜித் மீண்டும் இணையும் படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கும் செய்தி அறிந்து அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

    கூட்டணி அதிருப்தி

    கூட்டணி அதிருப்தி

    இதுவரை ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில் அடுத்து ஒரு வித்தியாச கூட்டணியில் பெரிய ஹிட் கொடுப்பதற்கான முயற்சியில் இறங்காமல், தனக்கு திருப்தியாக இருந்தால் போதும் என ஒரு கூட்டணி அமைத்திருப்பது தங்களுக்கு ஏமாற்றமளிப்பதாக ஒரு விநியோகஸ்தர் தெரிவித்தார்.

    கூட்டுக் கூட்டம்

    கூட்டுக் கூட்டம்


    இதற்கிடையே, விவேகம் நஷ்டம் குறித்துப் பேச விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்களின் கூட்டு கூட்டத்துக்கு ஏற்பாடு நடந்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

    -ஏகலைவன்

    English summary
    Sources say Ajith's fourth instalment with Siva has upset the distributors those incurred loss in previous movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X