வேற லெவல் தல... மீண்டும் வைரலாகும் அஜித்தின் சூட்டிங் வீடியோ

சென்னை : பொது இடங்களில் அதிகம் தோன்றாதவர் நடிகர் அஜித். இருந்தாலும் அரிதாக அவர் வெளியில் செல்லும் போது எடுக்கப்படும் ஃபோட்டோக்களும், வீடியோக்களும் செமயாக வைரலாக்கப்படும்.

சினிமா தவிர பைக் மற்றும் கார் ரேஸ்,துப்பாக்கிச் சுடுதல், ஏரோ மாடலிங், சமையல், ஃபோட்டோகிராஃபி என பலவற்றிலும் அதிக ஆர்வம் கொண்டவர் அஜித். அந்த துறைகளில் தனது திறமையையும் அவர் தொடர்ந்து வளர்த்துக் கொண்டு வருகிறார்.

துப்பாக்கிச் சுடுவதிலும் பிஸி

துப்பாக்கிச் சுடுவதிலும் பிஸி

படப்பிடிப்பில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் கிடைக்கும் கொஞ்சம் கேப்பிலும், துப்பாக்கிச் சுடுதல் பயிற்சிக்கு சென்று வருகிறார் அஜித். பயிற்சி எடுப்பதுடன் துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் கலந்து கொண்டு பதக்கங்களை வென்றுள்ளார் அஜித்.

போட்டியிலும் பங்கேற்பு

போட்டியிலும் பங்கேற்பு

2019 ல் டெல்லியில் நடந்த தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டியிலும் அஜித் கலந்து கொண்டார். அதைத் தொடர்ந்து சென்னையில் துப்பாக்கிச்சுடுதல் பயிற்சி கிளப் சார்பில் நடத்தப்பட்ட மாநில அளவிலான போட்டியிலும் கலந்து கொண்டார்.

மீண்டும் வைரலாகும் அஜித் வீடியோ

மீண்டும் வைரலாகும் அஜித் வீடியோ

அஜித் பயிற்சியில் ஈடுபடும் ஃபோட்டோக்களும், வீடியோக்களும் வைரலாவது வழக்கம் தான் என்றாலும் அதை எப்போதும் ஸ்பெஷலாக கொண்டாடுவது அஜித் ரசிகர்களின் வழக்கம். அப்படி தற்போதும் அஜித், சென்னையில் துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் ஈடுபட்ட வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

ஒவ்வொரு அசைவும் க்ளிக்

ஒவ்வொரு அசைவும் க்ளிக்

கருப்பு நிற உடையில், இலக்கை குறி வைத்து அஜித் சுடும் ஃபோட்டோக்களும், வீடியோக்களும் தான் வைரலாகி வருகிறது. அஜித் திரும்பி நிற்பது போல் இந்த ஃபோட்டோக்களும் வீடியோவும் இருந்தாலும், அவரின் ஒவ்வொரு அசைவுகளையும் ஸ்னாப் எடுத்து அதை சோஷியல் மீடியாவில் பரவ விட்டுள்ளனர்.

 அப்டேட் தந்த வெங்கட் பிரபு

அப்டேட் தந்த வெங்கட் பிரபு

ஏற்கனவே வலிமை அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு, இரண்டாவது சிங்கிளை யுவன் தயார் செய்து விட்டார். விரைவில் வருகிறது என கூறியதை குஷியில் கொண்டாடி வரும் அஜித் ரசிகர்கள், அஜித்தின் இந்த துப்பாக்கிச் சுடுதல் வீடியோவையும் வேற லெவலில் கொண்டாடி வருகின்றனர்.

ஐதராபாத்தில் வலிமை டீம்

ஐதராபாத்தில் வலிமை டீம்

அஜித் நடிக்கும் வலிமை படத்தின் ஷுட்டிங் தற்போது ஐதராபாத்தில் நடந்து வருகிறது. போனி கபூர் தயாரிப்பில் ஹச்.வினோத் இயக்கும் இந்த படம் ஆக்ஷன் படமாக உருவாக்கப்பட்டு வருகிறது. ஹுமா குரேஷி, கார்த்திகேயா, யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய ரோல்களில் நடித்து வருகின்றனர்.

தியேட்டரில் தான் ரிலீஸ்

தியேட்டரில் தான் ரிலீஸ்

கடைசி கட்டமாக இந்த படப்பிடிப்பு ஐதராபாத்தில் ஸ்டூடியோ ஒன்றில் நடந்து வருகிறதாம். இதைத் தொடர்ந்து படக்குழு இம்மாத இறுதியில் ரஷ்யா சென்று, அங்கு எடுக்கப்பட வேண்டிய க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சிகளை எடுக்க உள்ளதாம். இந்த ஆண்டு இறுதியில் தியேட்டர்களில் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.

Recommended Video

Valimai Update | Yuvan Shankar Raja Interview | U1 Records | Tamil Filmibeat
 முக்கிய நாளில் ரிலீசா

முக்கிய நாளில் ரிலீசா

அதனால் வலிமை படத்தை தீபாவளி அல்லது கிறிஸ்துமசுக்கு ரிலீஸ் செய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. எப்படி இருந்தாலும் வழக்கம் போல் அஜித்தின் வியாழக்கிழமை சென்ட்டிமென்ட் காரணமாக ஏதாவது ஒரு வியாழக்கிழமையில் தான் படத்தை ரிலீஸ் செய்ய உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X