ரசிகர் நெஞ்சில் அஜித் போட்ட ஆட்டோகிராஃப்...தீயாய் பரவும் வீடியோ

சென்னை : ஏகே 61 படத்தில் பிஸியாக நடித்து வந்த அஜித், சமீபத்தில் கிளம்பி ஐரோப்பா டுர் சென்றார். கார்,பைக், டிராவல் பிரியரான அஜித், தனது ஃபேவரைட் பிஎம்டபிள்யு பைக்கை எடுத்துக் கொண்டு டுர் சென்றுள்ளார்.

ஐரோப்பாவில் பெல்ஜியம், லண்டன் உள்ளிட்ட நகரங்களில் அஜித் சுற்றி வந்த போட்டோக்கள், வீடியோக்கள் கடந்த சில நாட்களாக அவ்வப்போது சோஷியல் மீடியாவில் பரவி டிரெண்டாகி வருகிறது.ரசிகர்களுடன் அஜித் எடுத்துக் கொண்ட போட்டோக்கள் செம டிரெண்டாகி வருகின்றன.

தான் கைப்பட எழுதி, கையெழுத்திட்ட வாழ்த்து அட்டைகளை ரசிகர்களுக்கு அஜித் வழங்கியது, லண்டனில் ஷாப்பிங் சென்டர் ஒன்றில் ஷாப்பிங் செய்து அங்குள்ளவரிடம் கைகுலுக்கி பேசியது, எதிரே வந்த பெண் ஒருவருக்கு வழிவிட்டது என அஜித் செய்யும் ஒவ்வொன்றும் டிரெண்டாகி வருகிறது.

விரைவில் இந்தியா திரும்பும் அஜித்

விரைவில் இந்தியா திரும்பும் அஜித்

கடந்த வாரம் லண்டனில் ஊர் சுற்றிய அஜித், அடுத்த வாரம் லண்டனில் இருந்து இந்தியா வருவார். வந்ததும் புதிய கெட்அப்பிற்கு மாற உள்ளதாகவும், அதன் பிறகு வடசென்னையில் நடக்க உள்ள ஏகே 61 ஷுட்டிங்கில் அஜித் கலந்து கொள்ள உள்ளதாகவும், மீதமுள்ள ஓரிரு காட்சிகளில் அஜித் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

அஜித் இப்போ எங்கே இருக்கார்

அஜித் இப்போ எங்கே இருக்கார்

இந்நிலையில் அஜித், குழந்தை ஒருவரை துக்கி வைத்திருப்பது போன்ற போட்டோ ஒன்று வைரலானது. அஜித் லண்டனில் தான் இருக்கிறார் என சொல்லப்பட்ட நிலையில், தற்போது பிரான்சின் பாரிஸ் நகரில் அஜித் வலம் வரும் போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் செம வைரலாகி வருகின்றன.

ரசிகர் நெஞ்சில் ஆட்டோகிராஃப்

ரசிகர் நெஞ்சில் ஆட்டோகிராஃப்

பாரிசில் ஈஃபில் டவர் அருகே ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டு, ஜாலியாக அஜித் பேசிய போட்டோக்கள், வீடியோக்களை அஜித் ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர். வீடியோ ஒன்றில் ரசிகர் ஒருவரின் டி-ஷர்ட்டில் அஜித் ஆட்டோகிராஃப் போடும் கிளிப்பிங் ஒன்று காட்டுத்தீ போல் சோஷியல் மீடியாவில் பரவி வருகிறது.

காட்டு தீயாய் பரவும் வீடியோ

காட்டு தீயாய் பரவும் வீடியோ

இதன் காரணமாக #Ajithkumar என்ற ஹேஷ்டேக் செம டிரெண்டாகி உள்ளது. அஜித், வயது வித்தியாசமின்றி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை எடுத்துக் கொண்ட போட்டோக்களை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பெரிய ஸ்டார் என கெத்து இல்லாமல் மிக எளிமையாக அஜித், ரசிகர்களுடன் பழகி வருவது அனைவரையும் கவர்ந்து வருகிறது.

Recommended Video

AjithKumar | எதிரே வந்த பெண், Thala செய்த காரியம்! நெகிழும் ரசிகர்கள் *Kollywood | Filmibeat Tamil
ஏகே 61 அடுத்த கட்ட ஷுட்டிங்

ஏகே 61 அடுத்த கட்ட ஷுட்டிங்

அஜித், இந்தியா திரும்பி வந்த பிறகு, அஜித் - மஞ்சு வாரியர் இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.வடசென்னைக்கு முன் புனேயில் சிறிய அளவிலான ஷுட்டிங் நடத்தப்பட உள்ளதாக மற்றொரு தகவலும் சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X