Don't Miss!
- News
தேனிலவில் ஷாக்.. குதிரையில் ஏறிய புதுமாப்பிள்ளை.. அடுத்து நொடி நடந்த "சம்பவம்".. அலறிய மணப்பெண்!
- Finance
இந்தியாவின் முதல் பட்ஜெட்..? நிர்மலா சீதாராமன் பட்ஜெட் சாதனை..! #Budget2023
- Lifestyle
பிப்ரவரி மாதம் இந்த 4 ராசிக்காரர்கள துரதிர்ஷ்டம் துரத்தி துரத்தி அடிக்கப்போகுதாம்... ஜாக்கிரதையா இருங்க...!
- Technology
ஏலியன் இருக்கா? AI ரோபோட் கண்டறிந்த 8 சிக்னல்.! வாய் பிளந்த விஞ்ஞானிகள்.! டிவிஸ்ட் மேல் டிவிஸ்ட்.!
- Automobiles
நம்மல மாதிரி கொடுத்து வச்சவங்க யாருமே இல்ல.. போட்டி போட்டுட்டு இந்த பிப்ரவரில காரை அறிமுகம் செய்ய போறாங்க!
- Sports
"கேப்டன் குற்றச்சாட்டு; துணைக்கேப்டன் பாராட்டு" நியூசி,தொடரில் ஏற்பட்ட சர்ச்சை..குழம்பும் ரசிகர்கள்
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
அதிக டிக்கெட் விலை.. அஜித் படத்துக்கு அதிரடியாக விதிக்கப்பட்ட அபராதம்.. என்ன இப்படி ஆகிடுச்சே!
சென்னை: போனி கபூர் தயாரிப்பில், ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான படத்திற்கு அதிக டிக்கெட் விலை வைத்து விற்றதாக கிளம்பிய புகாரை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம் அதிரடியாக அபராதம் விதித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.
முன்னணி நடிகர்களின் படங்கள் முதல் நாள் முதல் காட்சியில் எல்லாம் நிர்ணயிக்கப்பட்ட டிக்கெட் விலையை விட அதிக விலைக்கு டிக்கெட்டுகள் விற்கப்படுவதும் அது தொடர்பான சர்ச்சைகள் எழுவதும் வாடிக்கையாகி விட்டன.
இந்நிலையில், 100 ரூபாய் டிக்கெட்டை 525 ரூபாய்க்கு விற்கப்பட்டதாக சென்னையைச் சேர்ந்த காசிமாயன் என்பவர் செங்கல்பட்டு நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
தாயானார்
ஆலியா
பட்..மகிழ்ச்சியில்
திளைத்த
ரன்பீர்
கபூர்..குவியும்
வாழ்த்து!

அஜித் படம்
நடிகர் அஜித், வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் கடந்த 2019ல் வெளியான நேர்கொண்ட பார்வை படத்திற்கு அதிக டிக்கெட் விலை வைத்து விற்றதாக கிளம்பிய புகாரை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம் அதிரடியாக அபராதம் விதித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போனி கபூர் தயாரிப்பில் இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் பாலிவுட்டில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக் தான் நேர்கொண்ட பார்வை.

நோ மீன்ஸ் நோ
பாலியல் தொழில் செய்யும் பெண்களாகவே இருந்தாலும், அவர்கள் விருப்பத்தை மீறி அவர்களிடம் அத்து மீறக் கூடாது என்கிற கருத்தை இந்த படம் வெளிப்படுத்தி இருந்தது. இதில், வழக்கறிஞராக நடிகர் அஜித் பக்குவமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அவர் பேசிய நோ மீன்ஸ் நோ வசனத்தை பிடித்துக் கொண்டு அதிக விலைக்கு டிக்கெட் விற்கப்பட்டதற்கு எதிராக வழக்கு தொடர்ந்து தனக்கான நீதியை காசிமாயன் என்பவர் பெற்றுள்ளார்.

அதிக டிக்கெட் விலை
100 ரூபாய் மதிப்புள்ள டிக்கெட்டை குன்றத்தூர் பரிமளம் தியேட்டர் 525 ரூபாய்க்கு விற்றதாக சென்னையைச் சேர்ந்த காசிமாயன் என்பவர் செங்கல்பட்டு நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். அந்த வழக்கு தொடர்பான விசாரணை பல மாதங்கள் நடந்து வந்த நிலையில், தற்போது அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஒரு லட்சம் அபராதம்
அஜித் படத்திற்கு அதிக டிக்கெட் விலை விற்பனை செய்த வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம் பரிமளம் தியேட்டர் நிர்வாகத்துக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 425 ரூபாய் அபராதம் விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. வரும் பொங்கலுக்கு வாரிசு மற்றும் துணிவு படங்களின் டிக்கெட் விலைக்கு எதிராக யார் வழக்குப் போடப் போகிறார்களோ!