என்னது...ஆக்ஷன் இல்லாத ஏகே படமா?...நம்ப முடியாமல் திகைக்கும் ரசிகர்கள்

சென்னை : அஜித் நடிக்கும் புதிய படத்தில் ஆக்ஷன் காட்சிகளே கிட்டதட்ட இல்லை என்றும் சொல்லும் அளவிற்கு கதை அமைத்துள்ளார்களாம். இதை ரசிகர்கள் நம்ப முடியாமல், உண்மை தானா என கேட்டு வருகிறார்கள்.

அஜித் படம் என்றாலே பொதுவாக ஆக்ஷன், அதிரடி காட்சிகள், மாஸ் என்ட்ரி இருக்கும். கண்டிப்பாக பைக் ஓட்டும் சீன் ஒன்றாவது இருக்கும். இதை அனைத்து டைரக்டர்களும் கடைபிடித்து வரும் நிலையில், இந்த டிரெண்டை புதிய படத்தில் மொத்தமாக மாற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கவனத்தை ஈர்க்கும் அஜித் படங்கள்

கவனத்தை ஈர்க்கும் அஜித் படங்கள்

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து அஜித், ஹெச்.வினோத், போனி கபூர் மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் ஏகே 61. வலிமையின் பிரம்மாண்ட வசூல் சாதனை, ரசிகர்கள் கொடுத்த பெரும் ஆதரவை தொடர்ந்து அஜித் அடுத்து நடிக்க போகும் ஏகே 61, ஏகே 62, ஏகே 63 படங்களில் தான் அனைவரின் கவனமும் திரும்பி உள்ளது.

ஏகே 61 கதை இது தானா

ஏகே 61 கதை இது தானா

அஜித்தின் அடுத்த படமான ஏகே 61 படத்தையும் ஹெச்.வினோத் தான் இயக்குகிறார். ஹீரோ, வில்லன் என அஜித் இரட்டை வேடங்களில் நடிக்கும் இந்த படம் வங்கி கொள்ளையை மையமாகக் கொண்ட கதை. இதில் வில்லன் கேரக்டருக்காக நீண்ட வெள்ளை தாடியுடன் இருக்கும் வயதான தோற்றத்திற்கும், ஹீரோ கேரக்டருக்காக உடல் எடையை குறைத்து செம இளமையான தோற்றத்திற்கும் அஜித் மாறி வருகிறார்.

ஏகே 61 ஷுட்டிங் எப்போ

ஏகே 61 ஷுட்டிங் எப்போ

மார்ச் மாதமே இந்த படத்தின் ஷுட்டிங் துவங்கப்படும் என முதலில் கூறப்பட்டது. ஆனால் தற்போதைய தகவலின் படி ஏகே 61 படத்தின் ஷுட்டிங் ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் துவங்கப்பட உள்ளதாம். முதல் கட்ட ஷுட்டிங், ஏற்கனவே திட்டமிட்டது போல் ஐதராபாத்தில் அமைக்கப்பட்டுள்ள சென்னை அண்ணா சாலை செட்டில் தான் துவங்கப்பட உள்ளதாம். அன்றே படத்தின் டைட்டிலையும் அறிவிக்க போகிறார்களாம்.

என்னது ஆக்ஷன் கிடையாதா

என்னது ஆக்ஷன் கிடையாதா

2022 ம் ஆண்டு தீபாவளி ரிலீசை குறிவைத்து ஏகே 61 படம் எடுக்கப்பட உள்ளது. இதில் லேட்டஸ்ட் ஷாக் தகவல் என்னவென்றால் இந்த படத்தில் வழக்கமான அஜித் படங்களை போல் இல்லாமல் மிக மிக குறைந்த ஆக்ஷன் காட்சிகள் மட்டுமே உள்ளதாம். அஜித் நடிப்பு திறமையை முழுக்க முழுக்க இந்த படத்தில் பயன்படுத்த போகிறார்களாம். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க போகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X