»   »  மே-1 இன்று அஜித்குமார் பிறந்த நாள். அஜித் என்னதான் நினைக்கிறார்... என்னதான் சொல்கிறார்...?

மே-1 இன்று அஜித்குமார் பிறந்த நாள். அஜித் என்னதான் நினைக்கிறார்... என்னதான் சொல்கிறார்...?

Posted By:
Subscribe to Oneindia Tamil

அஜீத்தின் மேனேஜர், பிஆர்ஓ சுரேஷ் சந்திரா. அஜீத்துக்கு நெருக்கமான, நிழலைப் போலவே அவரைத் தொடரும் மனிதர். நடிகர்களை ரசிகர்கள், மக்கள் எப்படிப் பார்க்கிறார்கள், சமூகம் என்ன நினைக்கிறது, உண்மையில் நடிகன் என்பவன் யார் என்பது குறித்து அஜித் வெளிப்படையாகப் பேசியதைப் பகிர்ந்து கொண்டார்.

அஜீத் பேசியது...

Ajith's open talk about people

"ஒருவன் பிறந்த நாளை நிறையப் பேர் ஞாபகம் வைத்து இருந்தால் பர்த்டே கொண்டாட வேண்டிய அவசியம் இல்லை. எல்லோரும் அவனை மறந்து விட்டால் 'நான் உயிரோடுதான் இருக்கிறேன் எனக்கு இன்று பிறந்தநாள்' என்று அவன் விளம்பரம் செய்து கொள்வதில் தப்பே இல்லை.

தேசத்தில் காற்று, நதி எப்படியோ அதுபோல சினிமா கலைஞன் என்பவன் எல்லா மாநிலத்துக்கும், அனைத்து மொழிக்கும் பொதுவானவன். தி.மு.க ஆட்சியில் பேசவந்த உண்மையான கருத்தை மறைத்து வேறு எது எதையோ திரித்து எழுதினார்கள், எழுதுகிறார்கள். காவிரி நீர் பிரச்னை, விலைவாசி பிரச்னை, இதற்கு ஏன் சினிமா நடிகன் பதில் சொல்லாமல் இருக்கிறான், போராட மறுக்கிறான் என்ற தோற்றத்தை சமூகத்தின் மத்தியில் நடிகனை பற்றிய தவறான கருத்து திணிக்கப்படுகிறது.

நாங்கள் பொது மக்களில் ஒருவர். உங்களைப் போல்தான் நாங்களும் தேர்தலில் வாக்களித்தோம். சமூக பிரச்னைகளைக் களைவதற்கு என்று அரசியல் கட்சிகள் இருக்கின்றன. அரசாங்க அதிகாரிகள் இருக்கிறார்கள் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். நாட்டில் அவரவர்கள் தங்கள் வேலைகளை பார்க்கிற மாதிரி நாங்களும் சினிமா துறையில் நடிப்புத் தொழிலைப் பார்த்துக் கொண்டு இருக்கிறோம். எங்கள் தலையில் நீங்களாகவே கிரீடத்தை பொருத்தி கரங்களை இழுத்து சாலையில் தர்ணா செய்யச் சொல்லாதீர்கள். அரசாங்கத்தின் அதிகாரிகள் செய்ய வேண்டிய செயல்களை, சினிமாவில் அதிகாரிகளாக நடிக்கும் எங்களால் செயல்படுத்த முடியாது. திரையில் போலீஸ் அதிகாரியாக போலி ரவுடிகளிடம் சண்டை போடும் எங்களால், சமூகத்தில் இருக்கும் நிஜ ரவுடிகளை நெருங்கக்கூட முடியாது.

இதுதான் எதார்த்தம் எங்களை எடைபோடும் எந்திரம் மக்களாகிய நீங்கள்தான். எங்களைப்பற்றி நீங்கள் தவறாக கணித்தால் எந்திரம் பழுதாகி இருக்கிறது என்று அர்த்தம்."

அஜித் சொல்வதில் இருக்கும் நிதர்சனம் எல்லோருக்கும் புரிந்தால் சரி!

தொகுப்பு - ஆர்ஜி

English summary
Once Ajith Kumar openly says that people shouldn't pull actors to social issues and just watch him as an actor.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil