»   »  'அஜித் உழைப்புக்காகவே விவேகம் பார்ப்போம்' - பிரபல நடிகர்

'அஜித் உழைப்புக்காகவே விவேகம் பார்ப்போம்' - பிரபல நடிகர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : 'விவேகம்' படம் வெளிவந்து பல கலவையான விமர்சனங்களை சந்தித்தது. சினிமா பிரபலங்கள் சிலர் எதிர்மறை விமர்சனங்கள் சொன்னவர்களை எதிர்த்து விமர்சனம் செய்தனர்.

உலகம் முழுவதும் வெளிவந்த இந்தப் படத்திற்கு எதிர்மறை விமர்சனங்கள் எழுந்தாலும் சென்னை உள்ளிட்ட பல இடங்களில் வசூல்மழை தான்.

Ajith's performance should be seen in Vivegam movie - Arun Vijay

'விவேகம்' படம் படு வேகமாக வசூலில் மாஸ் காட்டி வருகிறது. எந்தப் படமும் செய்யாத சாதனையாக முதல் வாரத்தில் ரூபாய் 5.75 கோடியைச் சென்னையில் மட்டும் வசூலித்துள்ளது.

படத்தைப் பார்த்த பல பிரபலங்கள் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், 'என்னை அறிந்தால்' படத்தில் அஜித்துடன் இணைந்து முக்கிய வேடத்தில் நடித்த அருண் விஜய் சமீபத்தில் விவேகம் படத்தைப் பார்த்துள்ளார்.

படத்தைப் பார்த்து பின் அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், 'அஜித் சாரின் உழைப்பு படத்தில் நன்றாக தெரிகிறது. அவர் எப்போதும் சூப்பர். அவர் இப்போது நடிப்பில் மிகச்சிறப்பான இடத்தில் இருக்கிறார். அவரது நடிப்புக்காகவே 'விவேகம்' படம் பார்ப்போம்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

English summary
Actor Arun vijay tweets about vivegam movie. He says, 'Would watch it just for him'.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil