Don't Miss!
- News
கட்டடம் இடிந்து இளம்பெண் பலியான விவகாரம்.. இடிக்கும் பணியை உடனே நிறுத்த சென்னை மாநகராட்சி ஆர்டர்!
- Finance
Budget 2023:உணவு, உரம், எரிபொருள் மீதான ,மானியங்கள் குறைக்கப்படலாம்.. அப்படி நடந்தால் என்னவாகும்?
- Sports
ஆடுகளத்தை தவறாக கணித்தோம்.. கடைசி ஓவர் எல்லாத்தையும் மாற்றிவிட்டது.. ஹர்திக் பாண்டியா பேச்சு
- Lifestyle
உங்களுக்கு நரை முடி மற்றும் வறண்ட முடி இருக்கா? அப்ப இந்த டிப்ஸ்கள ஃபாலோ பண்ணுங்க...!
- Automobiles
முக்கியமான சாலையை கிழித்து கொண்டு சென்ற விசித்திரமான வாகனம்!! பதற்றத்தில் வழிவிட்ட வாகன ஓட்டிகள்...
- Technology
நம்பமுடியாத அம்சங்களுடன் மலிவு விலையில் இறங்கிய பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்.!
- Travel
காலம் காலமாக இஸ்லாமியர்கள் வழிபடும் சிவன் கோவில் – மனமுருகி வேண்டினால் கேட்டது கிடைக்குமாம்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
ரசிகர்களிடம் லைக்ஸை அள்ளும் அஜித்தின் ஃபேமிலி போட்டோ… பாத்துங்க ஊர் கண்ணே பட்டுடப் போகுது!
சென்னை: அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகிறது.
துணிவு படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் ஒருபக்கம் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட அஜித்தின் புகைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், தற்போது இணையத்தில் வெளியான ஒரு புகைப்படம் ரசிகர்களிடம் பயங்கரமாக ட்ரெண்ட் ஆகி வருகிறது.
அஜித் என் நடிப்பை பார்க்க ஆவலா இருக்காரா? இது வதந்தி இல்லையே- எஸ்.ஜே.சூர்யா காமெடி!

அஜித்தின் துணிவு பொங்கல்
கோலிவுட்டின் அல்டிமேட் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படும் அஜித், தற்போது துணிவு படத்தில் நடித்து முடித்துள்ளார். ஹெச் வினோத் இயக்கியுள்ள இந்தப் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தியேட்டர்களில் வெளியாகிறது. முக்கியமாக வரும் பொங்கல் ரேஸில் அஜித்தின் துணிவுடன் விஜய்யின் வாரிசு திரைப்படமும் களமிறங்குவதால், போட்டி பலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. துணிவு திரைப்படம் முழுக்க முழுக்க ஆக்சன் ஜானரில் உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ட்ரெண்டாகும் ஃபேமிலி போட்டோ
அஜித் எப்போதுமே அவரது படங்களின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள மாட்டார். துணிவு படத்திற்கும் அதேநிலைதான் என்பது ஏற்கனவே உறுதியாகிவிட்டது. ஆனால், சமீப நாட்களாக அஜித் செல்லும் இடமெல்லாம் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்து வருகிறார். இந்த போட்டோக்கள் எல்லாம் இணையத்தில் பயங்கரமாக வைரலாகி வருகின்றன. இந்நிலையில், தற்போது அஜித் அவரது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட போட்டோவும் வெளியாகியுள்ளது.

கண்ணுபட போகுதைய்யா
துணிவு படத்திற்காக சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் தாடி, மீசையுடன் நடித்த அஜித், இரு தினங்களுக்கு முன்னர் தான் அந்த கெட்டப்பில் இருந்து வெளியே வந்தார். தாடி, மீசையை ஃபுல்லாக ஷேவ் செய்து சாக்லேட் பாய் தோற்றத்துக்கு மாறிய அஜித்தின் போட்டோ வெளியாகியிருந்தது. அதே லுக்கில் ப்ளாக் கலர் டீசர்ட்டுடன் அஜித்தும் அவர் அருகே, மகன் ஆத்விக் குமார், மனைவி ஷாலினி, மகள் அனோஸ்கா குமார் ஆகியோரும் உள்ள போட்டோ தற்போது வெளியாகியுள்ளது. அஜித் தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட இந்த க்யூட் போட்டோவை ரசிகர்களும் அதிகமாக ஷேர் செய்து வருகின்றனர்.

ஷாலினியுடன் க்யூட் போட்டோ
முன்னதாக ஷாலினியின் பிறந்தநாளில் அவருடன் அஜித் எடுத்துக்கொண்ட போட்டோ வெளியாகியிருந்தது. அதன்பின்னர் அஜித்தும் ஷாலினியும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படம் 'இதயத்தின் தலைவி' என்ற கேப்ஷனுடன் ட்ரெண்டானது. தற்போது அவரது ஃபேமிலி போட்டோவும் வெளியாகி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் ட்ரீட் கொடுத்துள்ளது. ரசிகர்கள் இந்த போட்டோவை அதிகமாக ஷேர் செய்து வருவதோடு, "அழகான குடும்பத்துக்கு திருஷ்டி சுத்தி போடுங்க" எனவும் க்யூட்டாக கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

ரசிகர்கள் வெயிட்டிங்
கடந்த சில மாதங்களாக தான் அஜித்தின் போட்டோக்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. மீடியா வெளிச்சத்தில் இருந்து விலகியே இருக்கும் அஜித், ரசிகர்களுடன் போட்டோ எடுத்துக்கொள்வதில் மட்டும் ஆர்வம் காட்டுகிறார். அஜித்தின் இந்த மாற்றத்தை ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். அதேநேரம், நேரடியாக ப்ரோமோஷனுக்கு செல்லாமல், மறைமுகமாக ரசிகர்களுடன் இப்படி போட்டோ எடுத்து துணிவு படத்துக்கு அஜித் விளம்பம் தேடுவதாகவும் சிலர் குற்றம்சாட்டியுள்ளனர். துணிவு படத்தை முடித்துவிட்ட அஜித், விரைவில் ஏகே 62 படத்தில் நடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள இந்தப் படத்தை லைகா தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இதில், அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.