ஷாலினி பிறந்தநாளில் அஜித் கொடுத்த சர்ப்ரைஸ்… நடுவுல கொஞ்சம் மங்காத்தா ரீயூனியன்!
சென்னை: அஜித்தின் வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளதால், அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
இதனிடையே காதல் மனைவி ஷாலினியின் பிறந்தநாளை சூப்பராக செலிப்ரேட் செய்துள்ளார் அஜித்.
அதேபோல், அஜித் கேரியரில் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்த மங்காத்தா படத்தின் பிரபலத்தையும் அவர் நேரில் சந்தித்தது வைரலாகி வருகிறது.

ஷாலினியின் பிறந்தநாள்
அமர்க்களம் படத்தில் இணைந்து நடித்த போது காதலிக்கத் தொடங்கிய அஜித்தும் ஷாலினியும் 2000ம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டனர். அதன் பின்னர் ஷாலினி படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். 22 ஆண்டுகளாக இல்லற வாழ்க்கையில் சிறகடித்து வருகிறது இந்த நட்சத்திர தம்பதி. இந்நிலையில், ஷாலினி நேற்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடினார். இதனையடுத்து அவருக்கு திரை பிரபலங்களும் ரசிகர்களும் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்திருந்தனர்.

அஜித் கொடுத்த சர்ப்ரைஸ்
இந்நிலையில், ஷாலினியின் பிறந்தநாளுக்கு சூப்பராக ட்ரீட் கொடுத்து அசத்தியுள்ளார் அஜித். இந்த பர்த்டே பார்ட்டியில் அஜித் - ஷாலினியின் நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே இருவரும் க்யூட்டாக போட்டோவும் எடுத்துள்ளனர். ஷாலினி ஷோபாவில் அமர்ந்திருக்க அவர் அருகில் அஜித் நிற்கிறார். இருவரும் ஸ்மார்ட்டாக சிரித்தபடி இருக்கும் இந்த போட்டோவை ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

மங்காத்தா ரீயூனியன்
சமீபத்தில் அஜித் செல்லும் இடமெல்லாம் ரசிகர்களுடன் போட்டோ எடுத்து வருகிறார். இதெல்லாம் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருந்து கொண்டே இருக்க, இப்போது முக்கியமான பிரபலத்துடனும் அஜித் போட்டோ எடுத்துள்ளார். அஜித்தின் கேரியரில் ப்ளாக் பஸ்டர் ஹிட் படமாக அமைந்தது வெங்கட் பிரபு இயக்கிய 'மங்காத்தா.' 2011ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் அஜித்துடன் ஆக்சன் கிங் அர்ஜுனும் நடித்திருந்தார். இருவருமே நெகட்டிவ் கேரக்டரில் நடித்து மிரட்டியிருந்தனர். இந்நிலையில், அர்ஜுனை சமீபத்தில் சந்தித்த அஜித், அவருடன் இணைந்து போட்டோ எடுத்துக்கொண்டார்.

மங்காத்தா செகண்ட் பார்ட்?
அஜித் - அர்ஜுன் இணைந்து எடுத்துக்கொண்ட போட்டோவை மங்காத்தா ரீயூனியன் என்ற பெயரில் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். அதேபோல், மங்காத்தா செகண்ட் பார்ட் எப்போது வரும் எனவும் கேட்டுள்ளனர். அஜித் படங்களிலேயே செகண்ட் பார்ட் வந்தால் செம்மையாக இருக்கும் என பலரும் விரும்பும் படம் மங்காத்தா தான் என்பது குறிப்பிடத்தக்கது. வெங்கட் பிரபு மனசு வைத்தால் கண்டிப்பாக இது நடக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில், அஜித்தின் துணிவு பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள், டீசர், ட்ரெய்லர் எப்போது ரிலீஸாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











