»   »  அஜீத்தின் சிக்ஸ் பேக் ரகசியம் தெரிஞ்சிடுச்சே! #Vivegam

அஜீத்தின் சிக்ஸ் பேக் ரகசியம் தெரிஞ்சிடுச்சே! #Vivegam

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விவேகம் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனதுமே தினமும் 5 மணிநேரம் உடற்பயிற்சி செய்யத் துவங்கியுள்ளார் அஜீத்.

கார், பைக் ரேஸ்களில் கலந்து கொண்ட அஜீத் விபத்துகளில் சிக்கி காயம் அடைந்து பலமுறை அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார். ஆரம்பம் படத்தில் சண்டை காட்சியில் நடிக்கும்போது அவருக்கு காலில் அடிப்பட்டு பிரச்சனையானது.


டூப் போடச் சொன்னால் முடியாது என்று அடம்பிடித்து நடித்து அடிபடுவார்.


விவேகம்

விவேகம்

சிவா இயக்கித்தில் அஜீத் நடித்து வரும் விவேகம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் அவரின் சிக்ஸ் பேக் உடம்பை பார்த்து மிரளாதவர்களே இல்லை. அந்த அளவுக்கு மரணக் கொடூரமாக உள்ளார்.
உடற்பயிற்சி

உடற்பயிற்சி

விவேகம் கதையை கேட்டு அதில் நடிக்க ஒப்புக் கொண்டவுடன் தினமும் 5 மணிநேரம் உடற்பயிற்சி செய்யத் துவங்கியுள்ளார் அஜீத். பல அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்ட உடல் என்பதால் சிரமப்பட்டாலும் மனஉறுதியுடன் உடற்பயிற்சி செய்துள்ளார்.


அஜீத்

அஜீத்

விவேகம் படப்பிடிப்பின் பெரும்பகுதி வெளிநாடுகளில் படமாக்கப்பட்டது. அப்போது எல்லாம் இரவு 3 மணிக்கே எழுந்து உடற்பயிற்சி செய்யத் துவங்கிவிடுவாராம் அஜீத்.


ஐரோப்பா

ஐரோப்பா

படத்தின் 80 சதவீத காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. சென்னை பின்னி மில்ஸில் சில காட்சிகளை படமாக்க உள்ளார்கள். அதன் பிறகு மீண்டும் ஐரோப்பா செல்கிறது படக்குழு.


English summary
According to sources, Ajith has started working out for five hours from the day he signed Siva's movie Vivegam.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil