Don't Miss!
- Automobiles
காரா? இல்ல கப்பலா? டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் புதிய அவதாரத்தை கண்டு மிரளும் போட்டி நிறுவனங்கள்!
- News
இருக்குற சிக்கல்ல பேனா நினைவு சின்னம் எதுக்கு? உருப்படியா ஏதாவது செய்யுங்க.. சீமானுக்கு சசிகலா ஆதரவு
- Lifestyle
கருட புராணத்தின் படி இந்த 5 விஷயங்களை செஞ்சா, மரணத்திற்கு பின் நரகம் செல்வதை தவிர்க்கலாம்..!
- Sports
"கேப்டன் குற்றச்சாட்டு; துணைக்கேப்டன் பாராட்டு" நியூசி,தொடரில் ஏற்பட்ட சர்ச்சை..குழம்பும் ரசிகர்கள்
- Technology
தரமான 5G ஸ்மார்ட்போனை இந்தியாவுக்கு கொண்டுவரும் விவோ.! என்னென்ன அம்சங்கள்?
- Finance
பொறுப்புக்கு வந்த வாரிசுகள்.. குமார் மங்கலம் பிர்லா நிம்மதி..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
போட்டி அதிகமானதால் பதற்றத்தில் இருக்கிறாரா அஜித்..திடீர் விளம்பரம் ஏன்?
நடிகர் அஜித்தின் இயல்பே விளம்பரத்தை விரும்பாதவர் என்பதுதான் ஆனால் அவர் சமீப காலமாக அதிக அளவு தன்னைப்பற்றி பேசும்படி நடந்துக்கொள்கிறார் என்கிற விமர்சனம் எழுந்துள்ளது.
நடிகர் அஜித் தல என்பதை அழைக்கக்கூடாது என ரசிகர்களுக்கு கட்டளையிட்டவர், தனக்கு ரசிகர் மன்றம் கூடாது என கட்டளையிட்டவர்.
இருக்குமிடம் தெரியாமல் இருக்கும் எளிமையான அஜித்தின் திடீர் மாற்றம் பலரையும் புருவத்தை தூக்க வைத்துள்ளது.
Gulu
Gulu
Twitter
Review:
புரமோஷன்
பண்ணலைன்னாலும்..
படம்
நல்லா
இருந்தா
ஓடும்..
குலு
குலு
எப்படி?

வித்தியாசமான மனிதர் அஜித்
தமிழ் திரையுலகில் ஒரு வித்தியாசமான மனிதர் என்றால் அஜித்தை கூறலாம். விஜய்யின் ரசிகர்கள் போட்டியாளர் என்பதால் அவரை வெறுக்கின்றனர், மற்றப்படி யாராலும் வெறுக்க முடியாத மனிதராக திரைத்துறையில் ஒருவர் இருக்கிறார் என்றால் அது அஜித்தாக மட்டும் தான் இருக்க முடியும். காரணம் அவரது செயல்பாடு அப்படி. நம் வேலையை மட்டுமே பார்க்கவேண்டும், அடுத்தவர்கள் உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்கிற எண்ணம் உடையவர் அஜித்.

ஹாலிவுட் நடிகர் கீனு ரீவ்ஸ்-அஜித்
மேட்ரிக்ஸ், ஜான் விக் உள்ளிட்ட படங்களில் நடித்த கீனு ரீவ்ஸ் மிகப்பிரபலமான நடிகர். ஆனால் துளியும் பந்தா இல்லாதவர். மேட்ரிக்ஸ் படத்தில் இவருக்கான பங்கை டெக்னீஷியன்களுக்கு பிரித்து கொடுத்தவர். பலருக்கும் இயல்பை மீறி உதவி வருபவர், மிகவும் எளிமையாக நடப்பவர், சில நேரம் எனக்கென்ன என்று மெட்ரோ ரயிலில் பயணிப்பார். படத்தில் நடிக்க தன்னை வருத்திக்கொள்பவர். கிட்டத்தட்ட இதுபோன்ற குணமுடையவர்தான் அஜித். அவர் பந்தா உலகிற்குள் சிக்காமல் வாழ்கிறார். பைக் ரைடு போகிறார், துப்பாக்கி சுடுதலில் பயிற்சி எடுக்கிறார், ட்ரோன் டெக்னாலஜியை கற்றுக்கொடுக்கிறார். தனக்காக ஒரு வாழ்க்கை வாழ்கிறார்.

அனைவரையும் மதிக்கும் அஜித்தின் குணம்
ஒருநாள் உணவு அனுப்பும் ஊழியருக்கு ஒரு போன் வருகிறது, மறுமுனையில் பேசியவர் நான் அஜித்குமார் பேசுகிறேன் என்கிறார். இந்தப்பக்கம் உள்ளவருக்கு நிலைகால் புரியவில்லை, துள்ளி குதிக்கிறார். அவரிடம் பொறுமையாக அஜித் தனக்கு தேவையானவற்றை ஆர்டர் செய்கிறார். பலரும் அவர் போனில் பேசுகிறார்கள் பொறுமையாக பதில் சொல்கிறார். துப்பாக்கி சுடும்போட்டிக்கு வாடகை காரில் வந்து காவல் ஆணையர் அலுவலகத்தில் இறங்கியவரை அங்குள்ள போலீஸார் மிரண்டு போய் அட்ரஸ் சொல்லி அனுப்பி வைக்கின்றனர். அனைவருக்கும் பொறுமையாக செல்பி எடுக்க ஒத்துழைக்கிறார்.

அஜித்தின் இயல்பே அதுதான்
இது பொதுவெளியில் நடிப்பதற்காக அவர் செய்யவில்லை, அவரது இயல்பே அதுதான். யாரிடமும் கடிந்து பேச மாட்டார். ஆனால் பொதுவெளியில் வருவதை தவிர்ப்பார். வீண் விளம்பரங்களோ, பேட்டியோ, கருத்துச் சொல்வதோ, தனது பட ஆடியோ லாஞ்ச் அல்லது நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்வதோ அஜித்திடம் எப்போதும் இருந்ததில்லை. அதேபோல் ஊடகங்களுக்கு அஜித் பேட்டி கொடுப்பதில்லை. ஆரம்ப காலங்களில் ஒன்றிரண்டு பேட்டிகள் கொடுத்ததோடு நிறுத்திக்கொண்டார். அஜித் என்றால் அமைதையான குளம் போல் உள்ளே என்ன இருக்கிறது எவ்வளவு ஆழம் என்பது யாருக்கும் தெரியாது.

திரைத்துறையினரின் விளம்பர உத்தி
ஆனால் சமீப காலமாக திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் பலரும் அதிக அளவில் ட்விட்டர், இன்ஸ்டா, பொது நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்வது என செல்ஃப் ப்ரமோஷனில் ஈடுபடுவதும், தன் படம் வெளியாவதற்கு முன்னரே பட ப்ரமோஷனுக்காக பல நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்வதையும் வாடிக்கையாக வைத்துள்ளனர். இது சமீப காலமாக அதிகரித்துள்ளது. தினமும் படம் குறித்த ஏதாவது ஒரு செய்தியை உருவாக்குவது, ட்விட்டர் பிரபலங்கள் மூலம் ப்ரமோஷன் செய்ய வைப்பது வாடிக்கையாக உள்ளது. சில நேரம் அது அதீத எதிர்ப்பார்ப்பையும் கொடுத்து விடுகிறது.

ரஜினி, கமல், விஜய் பட ப்ரமோஷன் உத்திகள்
இதில் கைதேர்ந்தவர் ரஜினியை சொல்லலாம். அவர் படம் வெளியாவதற்கு சில மாதங்கள் முன்பிருந்து ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் கலந்துக்கொள்வார், பேசுபொருளாக தன்னை மாற்றிக்கொள்வார். நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தனது பட ப்ரமோஷனுக்காக மாற்றினார், விக்ரம் படத்துக்கு எப்போதும் இல்லாத அளவுக்கு ப்ரமோஷன் செய்யப்பட்டது. கமலே நேரடியாக பல நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டார். விஜய் எப்போதும் ஆடியோ லாஞ்ச் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்வார் அதில் அவர் பேச்சு பரபரப்பாக இருக்கும். பீஸ்ட் படத்துக்கு ஆடியோ லாஞ்ச் இல்லாததால் பேட்டி ஒளிபரப்பானது. இதில் விதிவிலக்காக இருந்தது அஜித் மட்டுமே.

பூக்கடைக்கு விளம்பரம் தேவையா? அஜித்தும் இறங்கிவிட்டாரோ?
பூக்கடைக்கு விளம்பரம் தேவையா என்பார்கள், ஆமாம் தேவை தான் என்பதை மேற்சொன்ன உதாரணங்களைக்காணலாம். ஆனால் இதில் விதிவிலக்காக இருப்பவர் என்று சொல்லப்படும் அஜித்தும் தற்போது இதில் சிக்கிவிட்டாரா? என்கிற கேள்வி சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி வருகிறது. அதற்கு பலரும் சொல்லும் காரணம் எப்போதும் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள விரும்பாத அஜித் சமீப காலமாக அதிக அளவில் போட்டோக்கள் வெளியிடுவதும், எங்கு போனாலும் அங்கு பொதுமக்களுடன் எடுக்கும் போட்டோக்களை பதிவிடுவதை ஆரம்பித்துள்ளார். இதுபோல் அவர் முன்னர் நடந்ததில்லை என்கின்றனர். புளு சட்டை மாறன்கூட இதை விமர்சித்திருந்தார்.

நிர்பந்தப்படுத்தப்படுகிறாரா? அஜித்
புளு சட்டை மாறனுக்கு வேறு கருத்து இருக்கலாம், ஆனால் பொதுவான கருத்துக்கு மாறாக அஜித் தன்னை மாற்றிக்கொண்டு ஊரோடு சேர்ந்து போகணும் என நினைக்கிறாரா அல்லது இப்படி போவதுதான் சரி என அவருக்கு சொல்லப்படுகிறதா? என்ற கேள்வி தான் தற்போது எழுப்பி வருகிறார்கள். பட ப்ரமோஷனுக்காக இதை செய்யணும் என்கிற நிர்பந்தம் அவரை இப்படி தள்ளுகிறதா? போட்டிகள் அதிகரித்துள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளதா? அதன் வெளிப்பாடுதான் பொதுமக்களை தேடி தேடி சந்திப்பது என்பது நிகழ்கிறதா என்கிற பேச்சு எழுந்துள்ளது.

ரசிகர்கள் விரும்பினால் மாற்றத்தில் தவறுண்டா?
ஓரிரு சம்பவங்களை வைத்து ஒருவர் மாறிவிட்டார் என்கிற முடிவுக்கு வரமுடியாது, அதே நேரம் மாறினால் என்ன தவறு, ரசிகர்கள் தனக்கு பிடித்த நடிகரை பார்க்கத்துடிக்கும்போது அதை மதிக்கிறார், எம்ஜிஆர் கூட பொதுமக்கள், ரசிகர்களிடையே இருப்பதைத்தான் விரும்புவார் என்பார்கள். ஆகவே இந்த மாற்றம் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடியது என்றால் என்ன தவறு, பல நூறுகோடி முதலீட்டில் வரும் படங்கள் இன்றைய போட்டி உலகில் தன்னை நம்பும் தயாரிப்பாளர்களை காக்க சில மாற்றங்கள் செய்தால் என்ன தவறு என்கிற கேள்வியும் அஜித் ரசிகர்கள் பக்கம் வைக்கப்படுகிறது.

மாற்றம் நிரந்தரமா?
அஜித் தனது தனித்தன்மையை இழக்காதவர், தானுண்டு தன் வேலையுண்டு என இருப்பவர். தன்க்கென தனி ஒரு வட்டத்தை வைத்து இயங்குபவர். இதில் யாருக்கும் பாதிப்பு இல்லை. இன்றைய நவீன உலகில் சிறு அசைவும் அவரவர் கையில் உள்ள கேமிராவால் படம் பிடிக்கப்படும். சமூக வலைதளங்களில் பகிரப்படும். அனைத்திற்கும் காரணம் தேட முடியாது, அஜித் மாறிவிட்டாரா? விளம்பர உலகில் பூக்கடைக்கும் விளம்பரம் தேவை என்கிற முடிவுக்கு வந்துவிட்டதா அஜித் தரப்பு என்பதை போகப்போகத்தான் புரிந்துக்கொள்ள முடியும். அது விமர்சன பொருளுமல்ல, காத்திருப்போம்.