»   »  'தல 56' படத்தில் அஜீத் தங்கச்சியா யாரு தாங்க நடிக்கிறா?

'தல 56' படத்தில் அஜீத் தங்கச்சியா யாரு தாங்க நடிக்கிறா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 'தல 56' படத்தில் அஜீத்தின் தங்கையாக பிந்து மாதவி நடிக்கவில்லையாம்.

சிறுத்தை சிவா இயக்கதில் அஜீத் மீண்டும் நடிக்க உள்ள படம் 'தல 56'. படத்திற்கு அச்சமில்லை என்று பெயர் வைக்கப்படும் என்று கூறப்படுகிறது. படத்தில் அஜீத், சந்தானம் நடிப்பது உறுதி. சந்தானம் அஜீத்தை இந்த படத்தில் கலாய்க்க உள்ளாராம். ஆனால் தல ரசிகர்கள் கடுப்பாகாத அளவுக்கு கொஞ்சமாக கலாய்க்க உள்ளாராம்.

படத்தின் ஹீரோயின் யார் என்பது குறித்தே ஏகப்பட்ட தகவல்கள் வெளியாகின.

தமன்னா

தமன்னா

'தல 56' படத்தில் அஜீத் ஜோடியாக தமன்னா நடிக்கிறார், இல்லை இல்லை சமந்தா நடிக்கிறார். இல்லை அவரும் இல்லை ஸ்ருதியுடன் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்படியே இரண்டாவது நாயகியாக நடிக்க பிந்து மாதவியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது என்று செய்திகள் வெளியாகின.

ஸ்ருதி

ஸ்ருதி

இறுதியில் தமன்னா, சமந்தா, பிந்து மாதவி ஆகிய யாரும் இல்லை ஸ்ருதி ஹாஸன் தான் அஜீத்தின் ஜோடி என்று செய்திகள் வெளியாகின. ஸ்ருதியை ஒப்பந்தம் செய்துவிட்டதாக சம்பந்தப்பட்டவர்களும் தெரிவித்தனர்.

பிந்து மாதவி

பிந்து மாதவி

படத்தில் அஜீத்தின் தங்கையின் கதாபாத்திரம் மிகவும் வெயிட்டானதாக வைத்துள்ளார் சிவா. அதனால் அந்த கதாபாத்திரத்தில் அஜீத்துடன் நடிக்க ஆசைப்படும் பிந்து மாதவியை நடிக்க வைக்க உள்ளார்கள் என்று கூறப்பட்டது.

தங்கை

தங்கை

நான் அஜீத் ஜோடியாக நடிக்க தான் ஆசைப்படுகிறேன். அவருடைய தங்கையாக எல்லாம் என்னால் நடிக்க முடியாது. 'தல 56' படத்தில் நான் அஜீத்தின் தங்கையாக நடிக்கவில்லை. அதற்கு வேறு ஆளைப் பாருங்கள் என்று பிந்து மாதவி தெரிவித்துள்ளார்.

யாருங்கோ?

யாருங்கோ?

அஜீத்தின் தங்கை பிந்து மாதவி இல்லை என்பது தெரிய வந்துள்ளது. அப்படி என்றால் அந்த வெயிட்டான கதாபாத்திரத்தில் நடிக்கப் போவது யார் தான் என தெரியவில்லை. ஒரு வேளை ட்வீட் போட்டாரே அந்த நடிகை தான் நடிப்பாரோ?

English summary
Bindu Madhavi has clarified that she is not acting as Ajith's sister in Thala 56.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil