»   »  அஜீத்துடன் அசத்தலான பர்ஸ்ட் லுக்குடன் வெளியானது "வேதாளம்"

அஜீத்துடன் அசத்தலான பர்ஸ்ட் லுக்குடன் வெளியானது "வேதாளம்"

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அஜீத் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தல 56 படத்தின் தலைப்பு சற்று முன்பு வெளியானது. அஜீத்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தலைப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறார்.

தல 56 படத்தின் தலைப்பு வேதாளம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார் அஜீத்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா. அஜீத்தின் அட்டகாசமான பர்ஸ்ட் லுக்குடன் தலைப்பை படக்குழுவினர் வெளியிட்டுருக்கின்றனர்

இதனால் சந்தோசமடைந்த அஜீத் ரசிகர்கள் இதற்காகத் தானே காத்திருந்தோம் என்று தங்கள் கொண்டாட்டங்களை ஆரம்பித்து விட்டனர்.
#vedhalam என்ற ஹெஷ்டேக்கை ட்விட்டரை திணறடித்துக் கொண்டிருக்கின்றனர்.

இவர்களின் கொண்டாட்டங்களால் தற்போது இந்தியளவில் ட்ரெண்டடித்துக் கொண்டிருக்கிறது #vedhalam ஹெஷ்டேக்.

தல 56

தல 56

என்னை அறிந்தால் படத்திற்குப் பின்பு அஜீத் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் தல 56. கிட்டத்தட்ட படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்தும் கூட படத்தின் தலைப்பை நீண்ட நாட்களாக அறிவிக்காமலே இருந்தனர் படக்குழுவினர்.

ஏமாற்றம்

ஏமாற்றம்

சில தினங்களுக்கு முன்பு கூட நண்பகல் ஒரு மணிக்கு படத்தின் தலைப்பு வெளியாகும் என்று அறிவித்து பின்பு அறிவிக்காமல் விட்டுவிட்டனர். இதனால் அஜீத் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.

தலைப்பு + பர்ஸ்ட் லுக்

அஜீத் ரசிகர்களுக்கு மேலும் மகிழ்ச்சி தரும் விதமாக படத்தின் தலைப்புடன் பர்ஸ்ட் லுக்கும் இன்று வெளியாகும் என்று சுரேஷ் சந்திரா ஏற்கனவே அறிவித்து இருந்தார். அதன்படி சற்று முன்பு படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக்கை தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் சுரேஷ் சந்திரா.இதனால் தற்போது டபுள் உற்சாகத்துடன் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் அஜீத் ரசிகர்கள்.

சிவப்புக் கலர் சட்டை

சிவப்புக் கலர் சட்டை

சிவப்புக் கலர் சட்டையில் காதில் கடுக்கன், விரல்களில் மோதிரங்கள், கைகளில் சங்கிலி மற்றும் ஒரு கையில் கூலிங்கிளாஸ் வைத்துக் கொண்டு ஷார்ப்பாக பார்ப்பது போன்று அஜீத்தின் லுக் உள்ளது. பர்ஸ்ட் லுக்கில் அஜீத் மிகவும் ஸ்டைலிஷாக இருக்கிறார், மேலும் கைகளில் வளையங்கள், மணிக்கட்டில் கயிறு என்று வித்தியாசமாக காட்சியளிக்கிறார் அஜீத்.

இந்தியளவில்

இந்தியளவில்

சுரேஷ் சந்திராவின் இந்த அறிவிப்பால் அஜீத் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். தற்போது படத்தின் தலைப்பை #vedhalamஎன்ற ஹெஷ்டேக் போட்டு ட்விட்டரில் கொண்டாடி வருகின்றனர் அஜீத் ரசிகர்கள். இந்தியளவில் அஜீத் படத்தின் தலைப்பும், சென்னை ட்விட்டர் மேப்பில் சுரேஷ் சந்திரா பெயரும் தற்போது ட்விட்டரில் ட்ரெண்டடித்துக் கொண்டிருக்கிறது.

உலகளவில்

உலகளவில்

தலைப்பு அறிவிக்கப்பட்ட சில மணித் துளிகளிலேயே இந்தியளவில் ட்விட்டரில் ட்ரெண்டான படத்தின் தலைப்பு தற்போது உலகளவில் ட்ரெண்டடித்துக் கொண்டிருக்கிறது.


அஜீத் ரசிகர்களின் தல தீபாவளி ஆரம்பம்.....

Read more about: thala 56, ajith, தல 56, அஜீத்
English summary
The waiting is finally over. The title of Ajith's forthcoming movie, which has been tentatively named "Thala 56" by his fans and the media all these months. Now the title is Revealed,Ajith's manager Suresh Chandra on his Twitter account. count down 2 Thala Deepavali starts "vedalam " official he tweeted.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil