»   »  சிவா - அஜீத்தின் ஹாட்ரிக் படம்... இன்று பூஜையுடன் தொடங்கியது!

சிவா - அஜீத்தின் ஹாட்ரிக் படம்... இன்று பூஜையுடன் தொடங்கியது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 3 வது முறையாக சிறுத்தை சிவா-அஜீத் இணையும் 'தல 57' படம் இன்று பூஜையுடன் தொடங்கியது.

'வீரம்', 'வேதாளம்' படங்களைத் தொடர்ந்து 3 வது முறையாக சிறுத்தை சிவா-அஜீத் இருவரும் இப்படத்தின் மூலம் இணைந்துள்ளனர். சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

Ajith's Thala 57 Starts with Pooja

எடிட்டராக ஆண்டனி எல்.ரூபன், ஒளிப்பதிவாளராக வெற்றி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். ஹீரோயின்களாக அனுஷ்கா, ரித்திகா சிங்கை படக்குழு ஒப்பந்தம் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

'தல 57' படத்தின் பாடல்களை கபிலன் வைரமுத்து எழுதுகிறார். இன்று இப்படத்தின் பூஜை சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள சாய் பாபா கோயிலில் நடைபெற்றது.

இதில் இயக்குநர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். 'பில்லா', 'ஆரம்பம்' பாணியில் ஸ்டைலிஷ் படமாக உருவாகும் இதில் அஜீத் உளவுத்துறை அதிகாரியாக நடிக்கிறார்.

விரைவில் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Siruthai Siva-Ajith Thala 57 Movie Pooja Today Held in Chennai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil