Don't Miss!
- Automobiles
இது செம காராச்சே! இதோட விலையை திடீர்ன்னு இவ்வளவு கூட்டிட்டாங்க! காரணம் இது தான்!
- News
வாழ்க்கைல ஏதோ மிஸ் ஆகுதேனு யோசிச்சுட்டே இருந்தேன்.. அப்போதான் மதியம் சாப்பிடலைனு ஞாபகமே வந்தது!
- Finance
7வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்..! விரைவில் குட் நியூஸ்
- Sports
இந்திய அணிக்கு அடித்த செம லக்.. மேலும் ஒரு ஆஸி. வீரர் விலகல்.. பின்னடைவை சந்திக்கும் ஆஸ்திரேலியா
- Lifestyle
உங்க காலில் இந்த பிரச்சினை இருந்தால் உங்கள் தைராய்டு சுரப்பியில் சிக்கல் இருக்குனு அர்த்தமாம்... ஜாக்கிரதை!
- Technology
பார்வை இழந்தவர்களுக்கான புது சூப்பர் Smartwatch.! இந்தியாவில் உருவான அசத்தல் கண்டுபிடிப்பு.!
- Travel
இனி திருப்பதியில் உண்டியல் பணம் கணக்கிடும் போது கண்ணாடி சுவர்கள் வழியே நீங்களும் பார்க்கலாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
சட்டவிரோதமாக இணையத்தில் லீக்கான துணிவு... இன்னும் பாக்ஸ் ஆபிஸ் ரிசல்ட்டே அதுக்குள்ளேவா?
சென்னை: நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களைத் தொடர்ந்து அஜித் நடித்துள்ள துணிவு இன்று வெளியானது.
அஜித் - ஹெச் வினோத் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ள இந்தப் படத்தையும் போனி கபூரே தயரித்துள்ளார்.
நள்ளிரவு 1 மணிக்கு FDFS காட்சியுடன் திரைக்கு வந்த துணிவு கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.
ஆனாலும் முதல் நாளில் நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளதாக சொல்லப்படும் நிலையில், துணிவு படக்குழுவுக்கு அதிர்ச்சியாக அமைந்துள்ளது ஒரு சம்பவம்.
மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது... ஆர்ஆர்ஆர் டீமிற்கு வாழ்த்து சொன்ன இளையராஜா!

நள்ளிரவு துணிவு FDFS
அஜித்தின் துணிவு திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று உலகம் முழுவதும் ரிலீஸானது. நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை தொடர்ந்து அஜித் - ஹெச் வினோத் கூட்டணி மூன்றாவது முறையாக இந்தப் படத்தில் இணைந்தனர். அஜித்துடன் மஞ்சு வாரியர், சமுத்திரகனி உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்திற்கு முதல் நாளில் நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளது. அதிகாலை 1 மணிக்கே FDFS காட்சி திரையிடப்பட்டதால் வசூலும் மாஸ் காட்டியதாக தெரிகிறது.

இணையத்தில் லீக்
அஜித்தின் துணிவு படத்துக்கு போட்டியாக விஜய்யின் வாரிசும் இன்று ரிலீஸானது. அதிகாலை 4 மணி காட்சியுடன் திரைக்கு வந்த வாரிசு படத்துக்கும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் இந்தாண்டு ஆரம்பமே கோலிவுட் பாக்ஸ் ஆபிஸ் மரண மாஸ் காட்டியுள்ளது. மேலும் அடுத்த வாரம் 17ம் தேதி வரை பொங்கல் விடுமுறையும் இருப்பதால், இரண்டு படங்களின் வசூலும் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், துணிவு திரைப்படம் சட்டவிரோதமாக இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

படக்குழு அதிர்ச்சி
துணிவு திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிடக் கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் அதையும் மீறி சட்டவிரோதமாக இணையத்தில் லீக்கானது திரையுலக பிரமுகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. அதேபோல் துணிவு படக்குழுவினரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இதனால் வரும் நாட்களில் துணிவு படத்தின் வசூலில் பாதிப்பு ஏற்படும் என அஞ்சப்படுகிறது. மேலும் இதுகுறித்து படக்குழுவினர் விரைந்து நடவடிக்கை எடுக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது.

வசூலில் பாதிப்பா?
துணிவு படத்திற்கு நல்ல ஓப்பனிங் கிடைத்திருந்தாலும் கலவையான விமர்சனங்களையே பார்க்க முடிகிறது. இதனால் பொங்கல் விடுமுறை தினங்களில் கிடைக்கும் கலெக்ஷனையே படக்குழு நம்பியுள்ளது. இந்த நிலையில் துணிவு திரைப்படம் சட்ட விரோதமாக இணையத்தில் வெளியானது, படக்குழுவினருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எவ்வளவு தான் முயன்றாலும் இணையத்தில் திருட்டுத்தனமாக படங்கள் வெளியாவதை தடுக்க முடியவில்லை என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.