For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  அடம் பிடிக்கும் அஜித்.. துவளும் துணிவு.. தமிழகம் தாண்டி எங்கும் போணியாகலை? டல்லடிக்கும் பிசினஸ்!

  |

  சென்னை: அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகிறது.

  அஜித்தின் துணிவு படத்துடன் விஜய்யின் வாரிசும் பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸாக உள்ளது.

  இந்நிலையில், துணிவு படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் அஜித் பங்கேற்காததால் தயாரிப்பாளர் போனி கபூர் கலக்கத்தில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

  துணிவு சில்லா சில்லா... அஜித் ரசிகர்களுக்கு பைத்தியம் பிடிக்கும்… இது அனிருத் வச்ச ட்விஸ்ட்துணிவு சில்லா சில்லா... அஜித் ரசிகர்களுக்கு பைத்தியம் பிடிக்கும்… இது அனிருத் வச்ச ட்விஸ்ட்

  அஜித் – ஹெச் வினோத் காம்போ

  அஜித் – ஹெச் வினோத் காம்போ

  அஜித் - ஹெச் வினோத் கூட்டணி தொடர்ந்து மூன்றாவது முறையாக 'துணிவு' படத்தில் இணைந்துள்ளனர். நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களைத் தொடர்ந்து உருவாகி வரும் துணிவு, பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகிறது. ஆனால், இன்னும் ரிலீஸ் தேதியை படக்குழு உறுதி செய்யவில்லை. அஜித்துடன் மஞ்சு வாரியர், பிக் பாஸ் பிரபலங்கள் அமீர், பவானி உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். அதேநேரம் அஜித்தின் துணிவு படத்துடன் விஜய்யின் வாரிசும் பொங்கலுக்கு வெளியாகிறது.

  துணிவு ப்ரீ தியேட்டர் பிசினஸ்

  துணிவு ப்ரீ தியேட்டர் பிசினஸ்

  துணிவு படத்தின் தமிழ்நாடு தியேட்டர் வெளியிட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வாங்கியுள்ளது. அதேபோல், ஓடிடி ரைட்ஸை நெட்பிளிக்ஸும், சாட்டிலைட் உரிமையை கலைஞர் டிவியும் கைப்பற்றியுள்ளது. ஆனால், துணிவு படத்தின் கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஏரியா உரிமையை வாங்க இன்னும் யாரும் முன் வரவில்லையாம். அதேபோல், வெளிநாட்டு உரிமையும் இன்னும் விற்பனையாகவில்லை என சொல்லப்படுகிறது. பொதுவாக ஆந்திரா கேரளாவில் விஜய், சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன் ஆகியோரின் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது. ஆனால், அஜித்தின் படங்கள் எப்போதுமே தமிழ்நாட்டை தாண்டி பெரிதாக போணியாவது கிடையாது.

  அஜித் தான் காரணம்?

  அஜித் தான் காரணம்?

  அஜித் எப்போதுமே படங்களில் நடிப்பதோடு சரி, ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள மாட்டார். ஆனால், துணிவு ப்ரோமோஷனில் பங்கேற்பார் என செய்திகள் வெளியான அடுத்த நிமிடமே, அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா அது பொய்யான தகவல் என விளக்கம் கொடுத்தார். மேலும், ஒரு நல்ல படம் தனக்கு தானே ப்ரோமோஷன் செய்துகொள்ளும் எனவும் குறிப்பிட்டிருந்தார். இதனால், துணிவு ப்ரோமோஷனுக்கு அஜித் வரமாட்டார் என்பது உறுதியானது. இதன் காரணமாக இப்போது துணிவு படத்தை வாங்க யாரும் முன்வரவில்லையாம்.

  தயாரிப்பாளர் கலக்கம்

  தயாரிப்பாளர் கலக்கம்

  சினிமா விளம்பரத்தை மட்டுமே நம்பி இருக்கிறது. படம் எப்படி இருக்கிறது என்பதை அஜித் தான் சொல்ல வேண்டும். அப்போது தான் படம் பற்றிய சந்தேகங்கள் விநியோகஸ்தர்களுக்கு தீரும் என சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர். அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை, வலிமை படங்கள் நெகட்டிவான விமர்சனங்களால் தோல்வியை தழுவியது. அப்படி இருக்கும் போது துணிவு படத்திற்கு ரசிகர்கள் நம்பி வரமாட்டார்கள் என்பதால், விநியோகஸ்தர்களும் வாங்க யோசிக்கிறார்களாம். இதனால், தயாரிப்பாளர் போனி கபூர் கலக்கத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

  அஜித் தான் யோசிக்க வேண்டும்

  அஜித் தான் யோசிக்க வேண்டும்

  முன்னதாக 2019ம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியான அஜித்தின் விசுவாசம், ரஜினியின் பேட்ட படத்தை காலி பண்ணியது. சமீபத்தில் புஷ்பா, ஆர்.ஆர்.ஆர், ராதேஷ்யாம், லால் சிங் சத்தா போன்ற படங்களின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் அந்தந்த படங்களின் ஹீரோக்கள் கலந்து கொண்டனர். தமிழில், விக்ரம், பொன்னியின் செல்வன் படக்குழுவினர் தீவிரமாக ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். இதனை சுட்டிக்காட்டும் சினிமா ஆர்வலர்கள், அஜித் தனது பிடிவாதத்தை தளர்த்திக் கொள்ள வேண்டும் என கூறியுள்ளனர். இப்போதைக்கு பொங்கல் ரேஸில் விஜய்யின் வாரிசு படத்துக்கு தான் எல்லாமே சாதகமாக காணப்படுகிறது.

  English summary
  Ajith's Thunivu film is releasing for Pongal. Udayanidhi's Red Giant has bought the theatrical release rights of the film. Also, OTT rights have been acquired by Netflix and satellite rights by Kalaingar TV. In this case, Thunivu pre-theatre business has not received the expected response. The reason for this is said to be Ajith not participating in promotional events for Thunivu.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X