Don't Miss!
- News
போதும் இந்த ஆளுநர் பதவி.. ஆளை விடுங்க.. விடுவித்து விடுங்கள்.. மோடியிடம் சொன்ன மகாராஷ்டிரா கவர்னர்
- Finance
வேண்டாம் என அனுப்பிய USA நிறுவனங்கள்.. அமெரிக்காவில் தான் இருப்போம்.. அடம்பிடிக்கும் ஊழியர்கள்!
- Lifestyle
இந்த 3 ஹார்மோன்கள்தான் பெண்களுக்கு பாலியல் ஆசை குறைய காரணமாம்... உடனே இத சரி பண்ணுங்க...!
- Automobiles
கார்களையே தூக்கி சாப்பிடும் வசதி! புதிய ஹோண்டா ஆக்டிவா விலை இவ்ளோதானா! இந்த மாதிரி ஒரு ஸ்கூட்டரை பாத்ததே இல்ல!
- Technology
OnePlus Keyboard-ல் இப்படி ஒரு ஸ்பெஷலிட்டியா? இப்போதே வாங்க ரெடியாகும் இந்தியர்கள்.!
- Sports
4 போட்டிகளில் விளையாட தடையா?.. இஷான் கிஷானுக்கு வந்த பெரும் சிக்கல்.. விளையாட்டு விணையானது எப்படி?
- Education
LIC ADO Recruitment 2023:எல்.ஐ.சி.,யில் 1516 பட்டதாரிகளுக்கு வாய்ப்பு...!
- Travel
உலகின் 7வது பழமையான நாடு இந்தியா – முதலிடத்தில் இருப்பது இந்த நாடா?
துணிவு ரிலீஸ் தேதி லாக் பண்ணிட்டாங்க.. இந்த தேதியில் தான் பொங்கலுக்கு வருதாம்!
சென்னை: அஜித்தின் துணிவு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான "சில்லா சில்லா" டிசம்பர் 9ம் தேதி புயலாக வெளியாக உள்ள நிலையில், பொங்கலுக்கு எந்த தேதியில் படம் வெளியாகும் என்கிற தகவல் சோஷியல் மீடியாவில் தீயாக பரவி வருகிறது.
இந்த பொங்கலுக்கு தல தளபதி நேரடி மோதல் இருக்குமா? இருக்காதா? என்பதை எல்லாம் தாண்டி இரு படங்களும் ஒரே நாளில் வெளியாகுமா? என்கிற கேள்வி தான் ஹாட் டாபிக்காக ஓடிக் கொண்டிருக்கிறது.
வாரிசு படத்தை முந்திக் கொண்டு ஒரு நாள் முன்னதாகவே துணிவு வெளியாகும் என தகவல்கள் வெளியான நிலையில், தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைப்பது போல ஹாட் அப்டேட் வெளியாகி உள்ளது.
ப்பா..
நீச்சல்
குளத்தில்
தூள்
கிளப்பிய
துணிவு
நடிகர்..
மனைவிக்கு
என்னம்மா
கிஸ்
கொடுக்குறாரு!

மூன்றாவது முறை கூட்டணி
நேர்கொண்ட பார்வை படத்தின் மூலம் இயக்குநர் ஹெச். வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் உடன் நடிகர் அஜித் கூட்டணி வைத்த நிலையில், வலிமை மற்றும் துணிவு என மூன்றாவது முறையாக இந்த கூட்டணி தொடர்ந்தது. வலிமை படம் விமர்சன ரீதியாக அடிவாங்கிய நிலையில், வலிமை நிச்சயம் ரசிகர்களை ஏமாற்றாது என எதிர்பார்க்கப்படுகிறது.

எல்லாமே இருக்கு
துணிவு படத்தில் வில்லனே அஜித் தான்.. அயோக்கியர்களின் ஆட்டம் என சொல்லப்பட்டாலும், வலிமை படத்தை போல பாடல்கள், குடும்ப சென்டிமென்ட் காட்சி, காமெடி என அனைத்து அம்சங்களும் துணிவு படத்தில் இருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஒரே நாளில் மோதல்
வாரிசு படத்துடன் அஜித் ஒரே நாளில் மோத மாட்டார் என்றும் ஒரு நாள் முன்னதாகவே துணிவு படத்தை ரிலீஸ் செய்ய பிளான் பண்ணுகின்றனர் எனக் கூறப்பட்டு வந்த நிலையில், மோதி பார்த்து விடலாம் என்கிற முடிவில் ஒரே நாளில் மோத உள்ளார் நடிகர் அஜித் என்கிற ஹாட்டான அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது.

ஜனவரி 12 ரிலீஸ்
அஜித்தின் துணிவு படம் வரும் ஜனவரி 12ம் தேதி இங்கிலாந்தில் வெளியாகப் போவதாக அதன் விநியோகஸ்தர்கள் அதிரடியாக அறிவித்துள்ள நிலையில், உலகம் முழுவதும் துணிவு படம் ஜனவரி 12ம் தேதி தான் வெளியாகும் என அஜித் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர். No Guts No Glory-ன்னு சும்மா சொல்லல.. துணிவு அதிக வசூல் செய்யுதா அல்லது வாரிசு செய்யுதான்னு பார்த்து விடலாம் என அஜித் ரசிகர்கள் விஜய் ரசிகர்களை வெறுப்பேற்றி வருகின்றனர்.

சில்லா சில்லா ரிலீஸ்
ஜிப்ரான் இசையில் உருவாகி உள்ள துணிவு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான சில்லா சில்லா பாடல் நாளை வெளியாகிறது. நாளை முதல் அஜித்தின் துணிவு படத்தின் அப்டேட் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே துணிவு படத்தின் சில்லா சில்லா பாடலின் சில நொடிகள் லீக்கானது குறிப்பிடத்தக்கது.