அஜித் ரசிகர்களுக்கு அல்டிமேட் அப்டேட்… துணிவு ட்ரெய்லர் ரிலீஸுக்கு நாள் குறிச்சாச்சு?

சென்னை: அஜித் தற்போது ஹெச் வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் நடித்து வருகிறார்.

பொங்கலுக்கு வெளியாகும் துணிவு படத்தின் தமிழக தியேட்டர் வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் வாங்கியுள்ளது.

இந்நிலையில், துணிவு படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.

அஜிதின் துணிவு

அஜிதின் துணிவு

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களைத் தொடர்ந்து அஜித், ஹெச் வினோத், போனி கபூர் கூட்டணி மூன்றாவது முறையாக துணிவு படத்தில் இணைந்துள்ளது. சென்னை, ஐதராபாத், தாய்லாந்து என பல இடங்களில் நடைபெற்ற துணிவு படத்தின் ஷூட்டிங் முடிவுக்கு வந்துவிட்டதாக சொல்லப்படுகிர்றது. இன்னொரு பக்கம் டப்பிங் பணிகளை தொடங்கியுள்ள துணிவு படக்குழு, அதற்கான வேலைகளிலும் தீவிரமாக உள்ளனர். இதனால், துணிவு படம் குறித்த அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன.

ட்ரெய்லர் ரிலீஸ் தேதி

ட்ரெய்லர் ரிலீஸ் தேதி

பொங்கலுக்கு விஜய்யின் வாரிசு திரைப்படமும் வெளியாகவுள்ளதால், போட்டி பலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவும் 8 வருடங்களுக்குப் பிறகு விஜய் - அஜித் படங்கள் நேருக்கு நேர் மோதவுள்ளன. இந்நிலையில், துனிவு படத்தின் ட்ரெய்லர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, துணிடு ட்ரெய்லர் டிசம்பர் 22ம் தேதி வெளியாகும் என சொல்லப்படுகிறது. டிசம்பர் 22ம் தேதி அஜித்தின் ராசியான நாளான வியாழக்கிழமை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால், அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன,

கை கொடுத்த உதயநிதி

கை கொடுத்த உதயநிதி

இதனிடையே, அஜித்தின் துணிவு தியேட்டர் ரைட்ஸை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் வாங்கியுள்ளது. இதனால் வாரிசு படத்தின் போட்டியை சமாளிக்கும் வகையில், துணிவு படத்தின் ப்ரோமோஷன் தெறிக்க விடும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். விக்ரம், காத்துவாக்குல ரெண்டு காதல், வெந்து தணிந்தது காடு என அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்களின் தமிழக தியேட்டர் ரைட்ஸை வாங்கிய உதயநிதி, அதற்கான ப்ரோமோஷன்களையும் செம்மையாக செய்து கொடுத்திருந்தார்.

இதுதான் துணிவு கதை

இதுதான் துணிவு கதை

அதேபோல், துணிவு ஓடிடி உரிமையை நெட்ஃபிளிக்ஸ் வாங்கியுள்ளது. தொலைக்காட்சி ரைட்ஸை கலைஞர் டிவி கைப்பற்றியுள்ளது. அஜித்துடன் மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள துணிவு, 1987ம் ஆண்டு பஞ்சாபில் நடந்த மிகப்பெரிய வங்கி கொள்ளையை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதில் அஜித் நெகட்டிவ் ரோலில் நடித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், மங்காத்தா படம் போல அஜித்தின் செம்ம மாஸ்ஸான சம்பவங்கள் இருக்கும் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X