கிழிந்த பேன்ட்...கையில் ரத்த காயங்களுடன் அஜித்...ஆச்சச்சோ என்னச்சு ஏகே.,வுக்கு ?
சென்னை :. கையில் ரத்த காயங்களுடன் இருக்கும் அஜித்திற்கு பெண் டாக்டர் ஒருவர் முதலுதவி செய்யும் போட்டோக்கள் இணையத்தில் படுவேகமாக காட்டுத்தீ போல் பரவி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் பதறிப் போய் ஏகே.,வுக்கு என்னாச்சு என கேட்டு வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் டாப் ஹீரோ மட்டுமின்றி, பலரின் ஃபேவரைட் ஹீரோவாகவும் இருப்பவர் அஜித். அமராவதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான அஜித், இன்று உச்ச நடிகர்களில் ஒருவர். சினிமாவில் பெரிய ஸ்டாராக இருந்தாலும், தனது தனிப்பட்ட வாழ்க்கையில் மிக எளிமையான, நல்ல மனதுடன் மனிதர், பல திறமைகளைக் கொண்ட திறமைசாலி என பலராலும் பாராட்டப்படுபவர். இவரின் உயர்வான குணங்களை புகழாத திரை பிரபலங்களே இல்லை எனலாம்.

வசூலை குவிக்கும் வலிமை
அஜித் நடித்த வலிமை படம் நீண்ட போராட்டங்கள், தடைகளை கடந்து மூன்று ஆண்டுகளுக்கு பிறகு சமீபத்தில் தான் ரிலீசானது. ரசிகர்களின் இத்தனை ஆண்டு காத்திருப்பு வீண் போகவில்லை என சொல்லும் அளவிற்கு உலக சினிமா ரசிகர்களை கவர்ந்து வசூல் சாதனை படைத்து வருகிறது. ரிலீசான 3 நாட்களிலேயே 100 கோடி கிளப்பில் இணைந்த வலிமை, ஒரு வாரத்திலேயே 200 கோடி கிளப்பிலும் இணைந்து விட்டது. இதனால் ரசிகர்கள் செம உற்சாகத்தில் உள்ளனர்.

ஏகே 61 க்கு தயாராகும் அஜித்
அஜித்தின் அடுத்த படமான ஏகே 61 படமும் மார்ச் 9 ம் தேதி பூஜையுடன் துவங்கப்பட உள்ளதாகவும், அன்று படத்தின் டைட்டில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையில் ஏகே 61 படத்திற்கு வல்லமை என பெயரிடப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. இந்த படத்தில் அஜித், ஹீரோ-வில்லன் என இரு வேடங்களில் நடிக்கிறார். இந்த படத்திற்காக 25 கிலோ வரை உடல் எடையை குறைக்க அஜித் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. நீண்ட வெள்ளை தாடியுடன் ஏகே 61 வில்லன் கெட்அப்பில் அஜித் இருக்கும் போட்டோக்களும் சமீபத்தில் வெளியாகி, வைரலாகின. இதனால் ஏகே 61 படத்தின் மீதான எதிர்பார்ப்பும் பல மடங்கு அதிகரித்துள்ளது.

ரத்த காயத்துடன் அஜித்
வலிமை, ஏகே 61 என ரசிகர்கள் அஜித்தை கொண்டாடி வரும் நிலையில் இன்று, கையில் ரத்த காயங்களுடன் இருக்கும் அஜித்திற்கு பெண் டாக்டர் ஒருவர் காயங்களுக்கு மருந்து போடுவது போன்ற போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. மற்றொரு போட்டோவில் அஜித்தின் இடது கையில் தோல் பெயர்ந்து, பெரிய அளவில் சிராய்ப்பு காயங்களுடன் அஜித் அமர்ந்திருப்பது போலவும், அவர் அருகில் கிழிந்த பேன்ட் கிடப்பது போன்ற போட்டோக்கள் வெளியானதால் ரசிகர்கள் பதறி போயினர்.

என்னாச்சு ஏகே.,வுக்கு
ஆனால் இந்த போட்டோக்கள் தற்போது எடுக்கப்பட்டது இல்லையாம். வலிமை ஷுட்டிங்கின் போது எடுக்கப்பட்டதாம். வலிமையில் பைக் ரேஸ் காட்சியில் நடிக்கும் போது, பைக்கில் முன் வீலை தூக்கியபடி, பின் வீலில் பேலன்ஸ் செய்து பைக் ஓட்ட வேண்டிய காட்சியாம். அப்போது பேலன்ஸ் தவறியதில் சாலையில் விழுந்த போது தான் அஜித்திற்கு இப்படி காயம் ஏற்பட்டதாம். இந்த விபத்து ஏற்பட்ட போது அஜித் 160 ஸ்பீடில் பைக்கை ஓட்டிக் கொண்டிருந்தாராம். வந்த வேகத்தில் பைக்குடன் அவர் சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டு விழுந்ததால் பேன்ட் கிழிந்து, சதை பெயர்ந்து காயம் ஏற்பட்டதாம். இதை சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூட ஸ்டன்ட் மாஸ்டர் கூறி இருந்தார்.

பதை பதைக்க வைக்கும் போட்டோஸ்
அஜித்திற்கு காயம் ஏற்பட்டதால் ரிஸ்க் வேணாம், டூப் வைத்து எடுத்துக் கொள்ளலாம் என டைரக்டர் சொன்னாராம். ஆனால் அஜித், பரவாயில்லை நானே செய்கிறேன். என்னுடைய உயிர் மட்டும் தான் உயிரா. டூப் போடுகிறவருக்கும் உயிர் இருக்கு தானே என்றாராம். அஜித்தின் இந்த தொழில் ஆர்வம், மற்றவர்களை மதிக்கும் தன்மை ஆகியவற்றை பேட்டியாக கேட்ட போது ரசிகர்கள் பாராட்டி வந்தனர். ஆனால் அஜித்திற்கு இந்த அளவிற்கு காயம் ஏற்பட்டது என்பதை தற்போது போட்டோவாக பார்த்து விட்டு அனைவரும் பதை பதைத்து போயினர்.


Click it and Unblock the Notifications











