போட்றா விசில...நாளை வெளியாகிறதா வலிமை டீசர் ?

சென்னை : ஹச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள வலிமை படத்தின் டீசர் நாளை வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை அஜித் ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடி வருகின்றனர்.

வலிமை டீசர் வெளியாக உள்ளதை அடுத்து ட்விட்டரில் ValimaiManiaStartsNow, ValimaiTeaserOnTheWay போன்ற ஹாஷ்டாகுகளை உருவாக்கி, அஜித் ரசிகர்கள் டிரெண்டிங் ஆக்கி உள்ளனர்.

தள்ளிப்போன வலிமை

தள்ளிப்போன வலிமை

2019 ம் ஆண்டு வெளியான பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்கான நேர் கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து போனி கபூர் தயாரிப்பில், ஹச்.வினோத் இயக்கி வரும் படம் வலிமை. நேர்கொண்ட பார்வை படத்தை முடித்த கையோடு வலிமை படத்தை துவங்கினர். ஆனால் கொரோனா, லாக்டவுன் போன்ற பல காரணங்களால் வலிமை படத்தின் ஷுட்டிங் தொடர்ந்து தள்ளிப்போனது.

அப்டேட் கேட்ட ரசிகர்கள்

அப்டேட் கேட்ட ரசிகர்கள்

ஆனால் அதற்குள் அஜித் ரசிகர்கள் தேர்தல் பிரசாரத்திற்கு வந்த விஐபி.,க்கள் முதல் கிரிக்கெட் மைதானம் வலிமை அப்டேட் கேட்டு தெறிக்க விட்டனர். இதனால் எங்கு திரும்பினாலும் வலிமை படம் பற்றிய பேச்சாகவே இருந்தது. ரசிகர்களை இதற்கு மேலும் காக்க வைக்க வேண்டாம் என்பதால் ஜுன் மாதம் படத்தின் ஃபஸ்ட்லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டது.

நாங்க வேற மாரி

நாங்க வேற மாரி

இதைத் தொடர்ந்து ஜுலை மாதம் வலிமை படத்தின் ஃபஸ்ட்சிங்கிளான நாங்க வேற மாரி பாடல் வெளியிடப்பட்டது. இந்த படம் சமீபத்தில் யூட்யூப்பில் 25 மில்லியன் பார்வைகளை பெற்றதாக போனி கபூர் ட்விட்டரில் அறிவித்தார். இதையும் ரசிகர்கள் கொண்டாடினர். இதைத் தொடர்ந்து இரண்டாவது சிங்கிள் எப்போது வரும் என ரசிகர்கள் கேட்க துவங்கினர்.

ரிலீஸ் எப்போது

ரிலீஸ் எப்போது

அதே சமயம் மற்ற பெரிய நடிகர்களின் படங்களின் ரிலீஸ் தேதி அடுத்தடுத்து வெளியானதால், வலிமை படம் தீபாவளிக்கு ரிலீசாகும் என சிலரும், ஆயுத பூஜைக்கு ரிலீசாகும் என சிலரும் கூறினர். ஆனால் படக்குழு அது பற்றி எந்த தகவலையும் வெளியிடவில்லை.

போஸ்ட் ப்ரொடக்ஷன்

போஸ்ட் ப்ரொடக்ஷன்

இறுதிக்கட்ட சண்டை காட்சிகளை ஸ்பெயினில் நடத்த படக்குழு முதலில் திட்டமிட்டிருந்தது. ஆனால் ஸ்பெயின் செல்ல அனுமதி கிடைக்க தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வந்தது. இதனால் இறுதிக்கட்ட காட்சிகளை ரஷ்யாவில் நடத்தி முடித்தனர். சமீபத்தில் ரஷ்யாவில் படத்தின் ஒட்டுமொத்த ஷுட்டிங்கையும் முடித்து விட்டு வந்து, போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகளை தீவிரமாக செய்து வருகின்றனர் படக்குழுவினர்.

நாளை வலிமை டீசர்

நாளை வலிமை டீசர்

இதனால் வலிமை ரிலீஸ் தேதியை கன்ஃபார்ம் பண்ணுங்க என அஜித் ரசிகர்கள் கேட்க துவங்கினர். தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்யவே படக்குழு நினைப்பதாக கூறப்படுகிறது. இதனால் முதல் கட்டமாக டீசரை ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாம். அதைத் தொடர்ந்து செகண்ட் சிங்கிள், டிரைலர் போன்றவற்றை ரிலீஸ் செய்ய உள்ளனராம்.

வியாழக்கிழமை சென்டிமென்ட்

வியாழக்கிழமை சென்டிமென்ட்

அஜித்தின் வியாழக்கிழமை சென்டிமென்ட் படி நாளை வலிமை டீசரை வெளியிடலாம் என படக்குழு திட்டமிட்டுள்ளதாம். இதற்கு முன்பும் வியாழக்கிழமை சென்டிமென்ட்டில் அஜித்தின் படங்கள் பற்றிய அறிவிப்புக்கள் வெளியிடப்பட்டன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X