»   »  அனிருத்தின் துள்ளலான இசையில்... வெளியானது வேதாளம் பாடல்கள்

அனிருத்தின் துள்ளலான இசையில்... வெளியானது வேதாளம் பாடல்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அஜீத் ரசிகர்கள் பெரிதும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த வேதாளம் படத்தின் பாடல்களை நேற்று நள்ளிரவில் படக்குழுவினர் வெளியிட்டனர்.

இசையமைப்பாளர் அனிருத்தின் 25 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்களுக்கு பிறந்தநாள் பரிசாக வேதாளம் பாடல்களை வெளியிட்டு இருக்கின்றனர்.

பெரிதாக விழா எதுவும் எடுக்காமல் இணையதளத்தில் நேரடியாக பாடல்களை வெளியிட்டு இருக்கின்றனர். மொத்தம் 5 பாடல்கள் படத்தில் இடம்பெற்று இருக்கின்றன.

வேதாளம்

வேதாளம்

அஜீத், ஸ்ருதி ஹாசன், லட்சுமி மேனன், சூரி, அஸ்வின். தம்பி ராமையா மற்றும் அப்புக்குட்டி என்று ஏராளமான நட்சத்திரங்களின் பங்களிப்பில் வேதாளம் உருவாகி இருக்கிறது.படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர், ப்ரோமோ சாங் டீசர் ஆகியவை ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் பலத்த வரவேற்பை பெற்று வருகின்றன.

பாடல்கள்

பாடல்கள்

நேற்று இரவு 11.30 மணியளவில் படத்தில் இடம்பெறும் பாடல்களை படக்குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். பாடல்கள் நன்றாக இருப்பதாக ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். வேதாளம் பாடல்கள் ரசிகர்களிடையே நேர்மறையான விமர்சனங்களை பெற்று வருகின்றன.

பாடகர்கள்

பாடகர்கள்

படத்தில் இடம்பெறும் பாடல்களை அனிருத் ரவிச்சந்தர், ஸ்ருதி ஹாசன்,சக்திஸ்ரீ கோபாலன், விஷால் தட்லனி, பாட்ஷா மற்றும் ரவிஷங்கர் பாடி இருக்கின்றனர். பாடல்களின் வரியை கவிஞர்கள் விவேகா, மதன் கார்க்கி மற்றும் ஜி.ரோகேஷ் இணைந்து எழுதி இருக்கின்றனர்.

வீர விநாயகா

படத்தின் ஓபனிங் பாடலாக இடம்பெறும் வீர விநாயகா வெற்றி விநாயகா பாடலை அனிருத் ரவிச்சந்தர், விஷால் தட்லனி இணைந்து பாடியிருக்கின்றனர். விவேக்கின் பாடல் வரிகளுக்கு அனிருத்தின் இசை நன்றாக ஒத்துழைத்து இருக்கிறது. பாடலில் நன்கு இளமையான தோற்றத்துடன் அஜீத் தோன்றுகிறார். அமர்க்களம் மற்றும் வான்மதி படங்களைத் தொடர்ந்து 3 வது முறையாக அஜீத்தின் படத்தில் விநாயகர் பாடல் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது. வீர விநாயகா மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றும் ரகம்.

டோன்ட் யூ மெஸ் வித் மீ

மதன் கார்க்கியின் பாடல் வரிகளுக்கு ஸ்ருதி ஹாசன், சக்திஸ்ரீ கோபாலன் குரல் கொடுத்து இருக்கின்றனர். அதிரடியான இசை மற்றும் துள்ளலான குரல்களில் ஒலிக்கும் டோன்ட் யூ மெஸ் வித் மீ பாடல் முழுவதும் அஜித்தைப் பற்றி பாடுவது போன்றே அமைந்து இருக்கிறது.டோன்ட் யூ மெஸ் வித் மீ இளம்பெண்களைக் கவரும் ரகம்.

உயிர் நாடி கலங்குதே

விவேகாவின் பாடல் வரிகளுக்கு ரவி ஷங்கர் குரல் கொடுத்திருக்கிறார், உயிர் நாடி கலங்குதே லட்சுமி மேனன்- அஜீத் இடையிலான பாச பாடலாகத் தோன்றுகிறது. பாச வரிகளுக்கு இடையே தன்னம்பிக்கை வரிகளும் ஆங்காங்கே தலை தூக்குகின்றன, அஜீத் ரசிகர்களுக்கு கண்டிப்பாக இந்தப் பாடல் பிடிக்கும்.

ஆலுமா டோலுமா

படத்தின் ப்ரோமோ பாடலாக வரும் ஆலுமா டோலுமா ஏற்கனவே டீசராக வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது முழுப் பாடலும் வெளியாகி இருக்கின்றது. பாடல் வரிகளை வைத்துப் பார்க்கும்போது அஜீத் டானாக வரும் காட்சிகளில் இந்தப் பாடல் இடம்பெறுவது தெரிகின்றது. அனிருத்தின் இசை மற்றும் ரோகேஷின் குரல் நன்கு துள்ளலாக அமைந்திருக்கின்றது, திரையரங்குகளில் ரசிகர்கள் ஆடுவது நிச்சயம். அனிருத் மற்றும் பாட்ஷா இணைந்து இந்தப் பாடலை எழுதியிருக்கின்றனர்.

தெறி தீம்

படத்தில் இசையாக வரும் இந்தப் பாடலுக்கு அனிருத்தின் இசை நன்கு வேகம் கூட்டியிருக்கிறது.ஆச்சரியமாக இந்தப் பாடல் வரிகளை இயக்குநர் சிறுத்தை சிவா எழுதியிருக்கிறார்.

வேதாளம் பாடல்கள் - உற்சாகம்...

    English summary
    Ajith starrer Vedalam audio is Released Yesterday directly on YouTube. It has been released as a birthday treat for the fans of Anirudh Ravichander, who turns 25 on 16 October.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil