»   »  வேதாளம் டிரெய்லர் இன்னும் 2 தினங்களில்?

வேதாளம் டிரெய்லர் இன்னும் 2 தினங்களில்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் வேதாளம் படத்தின் டிரெய்லர், இன்னும் 2 தினங்களில் வெளியாகலாம் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

அஜீத், ஸ்ருதி ஹாசன்,லட்சுமி மேனன் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகவிருக்கும் படம் வேதாளம். ஏற்கனவே படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர் மற்றும் பாடல்கள் ஆகியவை வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகின்றன.

Ajith's Vedalam Trailer

இந்நிலையில் வேதாளம் படத்தின் டிரெய்லர் இன்னும் 2 தினங்களில் வெளியாகும் என்று சினிமா வட்டாரங்களில் இருந்து நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

2 நிமிடங்கள் 32 நொடிகள் ஓடக்கூடிய இந்த டிரெய்லர் அநேகமாக புதன்கிழமை நள்ளிரவில் வெளியாக வாய்ப்புகள் இருக்கின்றன. பர்ஸ்ட் லுக் தொடங்கி பாடல்கள் வரை ஒவ்வொன்றையும் வியாழக்கிழமையில் படக்குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர்.

Ajith's Vedalam Trailer

எனவே இந்த வாரம் டிரெய்லரை படக்குழுவினர் வெளியிடலாம் என்று ரசிகர்கள் டிரெய்லரை வரவேற்கத் தயாராகி வருகின்றனர். 45 நொடிகள் ஓடக்கூடிய டீசர் ஏற்கனவே வெளியாகி இணையத்தில் பல்வேறு சாதனைகளை படைத்த நிலையில் தற்போது டிரெய்லரும் வெளியாகவிருக்கிறது.

Ajith's Vedalam Trailer

குடும்பக் கதையாக உருவாகியிருக்கும் வேதாளத்தில் ஆக்ஷனுக்கு குறைவில்லை என்பதும் படத்தில் அஜீத் டுகாட்டி பைக்குகளை ஓட்டியிருப்பதும், ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

வீரத்தைத் தொடர்ந்து அஜீத்துடன் 2 வது முறையாக சிறுத்தை சிவா இந்தப் படத்தில் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. டீசரில் தெறிக்க விட்ட அஜீத் டிரெய்லரில் என்ன செய்யப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

English summary
Ajith's Vedalam trailer is expected to be released in the next 2 Days. The 2 minutes 32 seconds trailer of the film will be Revealed on 29th of this month.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil