»   »  வேதாளம்: நவம்பர் 5ல் டிரெய்லர்... அன்றே முன்பதிவும் தொடக்கம்

வேதாளம்: நவம்பர் 5ல் டிரெய்லர்... அன்றே முன்பதிவும் தொடக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அஜீத் நடிப்பில் உருவாகி இருக்கும் வேதாளம் படத்தின் டிரெய்லர் நாளை நள்ளிரவில் வெளியாகவிருக்கிறது. கடந்த வாரம் டிரெய்லர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சில காரணங்களால் அது வெளியாகாமல் போனது.

இந்நிலையில் வழக்கம் போல நாளை நள்ளிரவில் படத்தின் டிரெய்லரை வேதாளம் குழுவினர் வெளியிடுகின்றனர். மேலும் டிரெய்லர் வெளியாகும் அதே நாளில் படத்திற்கான முன்பதிவும் தொடங்கவிருக்கிறது.

இதனால் அஜீத் ரசிகர்கள் தற்போது டபுள் உற்சாகத்தில் திளைத்து வருகின்றனர்.

வேதாளம்

வேதாளம்

அஜீத், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன், சூரி, தம்பி ராமையா, அப்புக்குட்டி ஆகியோரின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் வேதாளம். சிறுத்தை சிவா இயக்கியிருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர் படத்திற்கு எந்தவிதமான கத்திரியும் போடாமல் யூ சான்றிதழை வழங்கி இருக்கின்றனர். தீபாவளி வெளியீடாக நவம்பர் 10 தேதியில் வேதாளம் வெளியாகிறது.

டிரெய்லர்

டிரெய்லர்

அஜீத் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் படத்தின் டிரெய்லர் நாளை நள்ளிரவில் வெளியாகிறது. படம் தொடர்பான ஒவ்வொன்றையும் வியாழக்கிழமையில் வெளியிட்டு வந்த படக்குழுவினர், படத்தின் டிரெய்லரையும் வியாழனிலேயே வெளியிட முடிவு செய்திருக்கின்றனர். 2 நிமிடங்கள் 32 நொடிகள் ஓடும் இந்தத் டிரெய்லரில் அஜீத் அதிரடி காட்டியிருப்பதாக கூறுகின்றனர்.

முன்பதிவு

முன்பதிவு

வேதாளம் படத்திற்கான முன்பதிவானது நவம்பர் 5 ம் தேதி முதல் தொடங்கவிருக்கிறது. சென்னையின் பல்வேறு தியேட்டர்களிலும் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்திட அஜீத் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

அயல்நாடுகளில் 550

அயல்நாடுகளில் 550

இந்தியா தவிர்த்த வெளிநாடுகளில் சுமார் 550 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வேதாளம் வெளியாகவிருக்கிறது. வட அமெரிக்காவில் 120 திரையரங்குகளிலும், 200 க்கும் அதிகமான திரையரங்குகளில் ஐரோப்பாவிலும் வேதாளம் வெளியாகிறது. இதைத் தவிர இலங்கையில் 30, ஆசிய நாடுகளில் 150 மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் 50 திரையரங்குகளிலும் படம் வெளியாகவிருப்பதாக கூறுகின்றனர்.

மலேசியா

மலேசியா

மலேசியாவில் 40 திரையரங்குகளிலும், யூகேவில் 58 திரையரங்குகளிலும் படத்தை வெளியிடவிருக்கின்றனர். மேலும் ஆஸ்திரேலியா மற்றும் கனடா நாடுகளில் வேதாளம் குறிப்பிடத்தகுந்த திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. கடைசி நேரத்தில் இந்த எண்ணிக்கைகள் மாறலாம் ஆனால் அவை பெரிதான அளவில் இருக்காது என்று தகவல்கள் கூறுகின்றன.

தமிழ்நாடு

தமிழ்நாடு

தமிழ்நாட்டில் சுமார் 500 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் அஜீத்தின் வேதாளம் வெளியாகிறது. வீரம் படத்தைத் தொடர்ந்து அஜீத் - சிறுத்தை சிவா இணைந்திருக்கும் இந்தப் படமும் குடும்பத் திரைப்படமாக உருவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
November 5: Vedalam Movie Advance Booking Started and the Movie Trailer will out on The Same day. Ajith's Vedalam Worldwide Hit on The Screens on November 10.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil