»   »  வேதாளம்: சென்சார் இப்படிக் கிடைத்ததும்... டிரெய்லரை அப்படி வெளியிடுவார்களாம்

வேதாளம்: சென்சார் இப்படிக் கிடைத்ததும்... டிரெய்லரை அப்படி வெளியிடுவார்களாம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வேதாளம் படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைத்த பின்னர், படத்தின் டிரெய்லரை யூடியூபில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்திருக்கின்றனராம்.

கடந்த புதன்கிழமை நள்ளிரவில் படத்தின் டிரெய்லர் வெளியாகும் என்று நம்பத் தகுந்த தகவல்கள் வெளியாகின.ஆனால் எதிர்பார்த்தபடி படத்தின் போஸ்ட் புரொடக்க்ஷன் வேலைகள் முடியவில்லை.

இதனால் படத்தில் இடம்பெற்ற வீர விநாயகா பாடலின் டீசரை மட்டும் வேதாளம் படக்குழுவினர் வெளியிட்டு இருந்தனர்.

வேதாளம்

வேதாளம்

அஜீத். ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன், சூரி நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகவிருக்கும் படம் வேதாளம். சிறுத்தை சிவா இயக்கியிருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க, ஏ.எம்.ரத்னம் தயாரித்து இருக்கிறார். படத்தின் பாடல்கள், டீசர் ஆகியவை சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன.

டிரெய்லர்

டிரெய்லர்

இந்நிலையில் புதன்கிழமை நள்ளிரவில் படத்தின் டிரெய்லர் வெளியாகும் என்று நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகின. இதனால் டிரெய்லரை வரவேற்க அஜீத் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்துடன் காத்திருந்தனர், ஆனால் டிரெய்லருக்குப் பதிலாக வீர விநாயகா பாடலின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டு இருந்தனர்.படத்தின் போஸ்ட் புரொடக்க்ஷன் வேலைகள் எதிர்பார்த்தபடி முடிவடையாததால் டிரெய்லரை படக்குழுவினர் வெளியிடவில்லையாம்.

சென்சார் சான்றிதழ்

சென்சார் சான்றிதழ்

தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்க்ஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.அனிருத் படத்தின் இசைக் கோர்ப்பு பணிகளில் தீவிரம் காட்ட, மற்றொருபுறம் எடிட்டர் ரூபன் டிரெய்லரின் எடிட்டிங் பணிகள் அனைத்தையும் முடித்துக் கொடுத்திருக்கிறார். ஆனால் சென்சார் சான்றிதழ் கிடைத்த பின்னர் படத்தின் டிரெய்லரை வெளியிடலாம் என்று படக்குழுவினர் முடிவு செய்திருக்கின்றனராம். வேதாளத்திற்கு அனைவரும் பார்க்கும் வண்ணம் யூ சான்றிதழ் கிடைக்க வேண்டும், அதுவும் எந்தக் கட்டும் இல்லாமல் கிடைக்க வேண்டும் என்பது படக்குழுவினரின் எண்ணமாக உள்ளது.

நவம்பர் 10

நவம்பர் 10

நவம்பர் 10 ம் தேதி கமலின் தூங்காவனம் படத்துடன், அஜீத்தின் வேதாளம் கண்டிப்பாக வெளியாகும் என்று கூறுகின்றனர். இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு படக்குழுவினர் தரப்பிலிருந்து விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  English summary
  Vedalam: After Get Sensor Certificate the Movie Makers to Release The Trailer on You Tube. Sources Said "Vedalam Will be Released on November 10".
  Please Wait while comments are loading...

  Tamil Photos

  Go to : More Photos

  சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil