twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அனிருத்துக்கு மறுவாழ்வு கொடுத்த அஜித்தின் வேதாளம் திரைப்படம்..7 ஆண்டுகள்

    By Staff
    |

    பீப் சாங்கால் சிக்கலில் சிக்கி அனைவராலும் ஒதுக்கப்பட்ட அனிருத்துக்கு வேதாளம் படம் மூலம் மறுவாழ்வு கிடைத்தது.

    அஜித்தின் படத்தை இயக்கிய சிறுத்தை சிறுத்தை சிவாவின் இரண்டாவது படம் வேதாளம்.

    இதற்கு முன்னர் வீரம் படத்தை சிறுத்தை சிவா இயக்கினார். அப்படம் நன்றாக ஓடியது.

    தமன்னா ஹீரோயின்.. கீர்த்தி சுரேஷ் தங்கச்சி.. பூஜையுடன் ஆரம்பமானது வேதாளம் தெலுங்கு ரீமேக்!தமன்னா ஹீரோயின்.. கீர்த்தி சுரேஷ் தங்கச்சி.. பூஜையுடன் ஆரம்பமானது வேதாளம் தெலுங்கு ரீமேக்!

     அஜித்தின் வி வரிசை படங்கள்

    அஜித்தின் வி வரிசை படங்கள்

    அஜித் குமார் நடிப்பில் வெளியான படங்களில் வி வரிசை படங்கள் மிகவும் முக்கியமானது. வி வரிசை படங்களில் இணைந்தவர் சிறுத்தை சிவா. இவரது படங்களில் வரும் காட்சிகள் நம்ப முடியாததாக இருந்ததால் அதிகம் சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டது. அதிகம் கிண்டலடிக்கப்பட்ட இயக்குநரும் சிறுத்தை சிவாவாகத்தான் இருப்பார். ஆனால் அவர் விமர்சிக்கப்பட்டாலும் அவரது படங்கள் நன்றாக ஓடி வெற்றிபெற்றுவிட்டன.

     வீரம் படத்திலிருந்து அஜித்தின் ஆஸ்தான இயக்குநரான சிறுத்தை சிவா

    வீரம் படத்திலிருந்து அஜித்தின் ஆஸ்தான இயக்குநரான சிறுத்தை சிவா

    அஜித்துடன் முதன் முதலில் 2014 ஆம் ஆண்டு வீரம் படத்தில் இணைந்தார் சிறுத்தை சிவா. வீரம் படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதன் பின்னர் வேதாளம் படத்தில் இணைந்தார். இந்தப்படமும் அஜித்துக்கு வெற்றிப்படமாகும். இந்தப்படம் 2011 ஆம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித்-அர்ஜுன் நடித்து வெளிவந்த மங்காத்தா படத்தின் வசூலை முறியடித்தது. இந்தப்படத்தில் நீண்ட காலத்திற்கு பின்னர் அனிருத் மீண்டும் இசையமைக்க வந்து ரீ என்ட்ரி கொடுத்தார். இந்தப்படத்தில் 'ஆளுமா டோலுமா' என்கிற பாடல் பெரிய அளவில் ஹிட் அடித்தது. இந்தப்படம் முழுவதும் தங்கை செண்டிமெண்டாக இருக்கும் தங்கை முன் அப்பாவியாக இருக்கும் அஜித் தனியாக டெரராக இருப்பார்.

     அனிருத்துக்கு ரீ-எண்ட்ரி கொடுத்த வேதாளம் படத்தின் ஆளுமா டோலுமா பாடல்

    அனிருத்துக்கு ரீ-எண்ட்ரி கொடுத்த வேதாளம் படத்தின் ஆளுமா டோலுமா பாடல்

    பீப் சாங் போட்டு சர்ச்சையில் சிக்கிய அனிருத்துக்கு அதன் பின்னர் பட வாய்ப்புகள் குறையத்தொடங்கியது. இந்த நேரத்தில் அவருக்கு அஜித் படமான வேதாளம் படத்தில் இசையமைக்க வாய்ப்பு கிடைத்தது அதை நன்கு பயன்படுத்திக்கொண்டார். ஆளுமா டோலுமா பாடல் பட்டிதொட்டியெங்கும், டிவி ஷோக்கள், திருமண சுப நிகழ்ச்சிகளில் பட்டையை கிளப்பியது. அதன் பின்னர் ஆரம்பித்த அனிருத்தின் செகண்ட் இன்னிங்க்ஸ் பேட்ட, தர்பார், பீஸ்ட், விக்ரம் என தொடர் வெற்றியை கொடுத்தது. பீப் சாங்கில் பிரிந்த தனுஷ்-அனிருத் ஜோடி திருச்சிற்றம்பலத்தில் இணைந்தது.

     பேட்டையை வீழ்த்திய விஸ்வாசம்

    பேட்டையை வீழ்த்திய விஸ்வாசம்

    வீரம், வேதாளம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அஜித்தின் ஆஸ்த்தான பட இயக்குநர் ஆனார் சிறுத்தை சிவா. அடித்து அஜித்தின் விவேகம் படத்தையும் சிறுத்தை சிவாவே இயக்கினார். இந்தப்படத்தில் அமைந்த நம்பமுடியாத காட்சிகள் நெட்டிசன்களால் விமர்சிக்கப்பட்டாலும் படம் சிறப்பாக ஓடியது. தொடர்ந்து அடுத்த படமான விசுவாசம் 2018 ஆம் ஆண்டு வெளியானது. இதனுடன் ரஜினியின் பேட்ட படமும், சிம்புவின் வந்தா ராஜாவாத்தான் வருவேன் படமும் மோதியது. இதில் விஸ்வாசம் முந்தியது. சிம்பு படம் வெளியேறியது. பேட்ட, விசுவாசம் இரண்டு மதயானைகளின் மோதல் போல் பிரம்மாண்டமாக இருந்தது.

     விஸ்வாசம் வெற்றியால் ரஜினியின் பார்வை பட்ட சிறுத்தை சிவா

    விஸ்வாசம் வெற்றியால் ரஜினியின் பார்வை பட்ட சிறுத்தை சிவா

    அஜித்தின் வேதாளம் படத்துக்கு பின் அடுத்து விஸ்வாசம் பெற்ற வெற்றியை அடுத்து அண்ணாத்த படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்தது சிறுத்தை சிவாவுக்கு. அதேபோல் தொடர்ந்து அடுத்து சூர்யாவின் படத்தையும் இயக்க உள்ளார் சிவா. வி ராசியால் தனது படத்துக்கு வலிமை என பெயர் வைத்தார் அஜித். அந்தப்படமும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.

    Read more about: அனிருத் vedhalam
    English summary
    Anirudh got rehabilitated by Vedhalam, who got into trouble with Beef Sang and was shunned by everyone. Vedalam is the second film of Siruthai Siva who directed Ajith's film. Before this Veeram was directed by Siruthai Siva. The film ran well.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X