»   »  வெளியானது வேதாளத்தின் ரகசியங்கள்... கேங்ஸ்டராக அஜீத்?

வெளியானது வேதாளத்தின் ரகசியங்கள்... கேங்ஸ்டராக அஜீத்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வேதாளம் படத்தின் வெளியீடு நெருங்குவதைத் தொடர்ந்து வேதாளத்தின் ரகசியங்கள் தற்போது ஒவ்வொன்றாக வெளியாகி வருகிறது.

இந்தப் படத்தில் அஜீத்தின் கதாபாத்திரம் மற்றும் நடித்தவர்கள் விவரம் போன்ற முழு விவரங்களும் தற்போது வெளியாகி இருக்கிறது.

மேலும் இந்தப் படத்தின் கதையானது ரஜினி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற பாட்ஷா படத்தின் கதை போன்றே இருப்பதாகவும் கூறுகின்றனர்.

வேதாளம்

வேதாளம்

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் வேதாளம். இப்படத்தில் அஜீத்துடன் இணைந்து ஸ்ருதிஹாசன், லட்சுமிமேனன், தம்பிராமையா, அஸ்வின், அப்புக்குட்டி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகியுள்ள நிலையில் தற்போது படத்தின் பாடல்களை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்திருக்கின்றனர்.

பாட்ஷா போன்று

பாட்ஷா போன்று

வேதாளம் படத்தின் படப்பிடிப்பை சென்னை, கொல்கத்தா போன்ற இந்திய நகரங்களிலும் மற்றும் சில வெளிநாடுகளிலும் சிறுத்தை சிவா நடத்தினார். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் இப்படம் பாட்ஷாவைப் போன்று கேங்ஸ்டர் மற்றும் ஒரு ஆக்க்ஷன் பொழுதுபோக்கு படமாக இருக்கும் என்று கூறுகின்றனர்.

அஜீத்தின் பெயர் கணேஷ்

அஜீத்தின் பெயர் கணேஷ்

வேதாளத்தில் அஜித், கணேஷ் என்ற கதாபாத்திரத்திலும் அவரின் தங்கையாக வரும் லட்சுமி மேனன் தமிழ் என்ற கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறாராம்.தம்பிராமையா இவர்களுக்கு அப்பாவாகவும், அப்புக்குட்டி அஜித்துக்கு நண்பராகவும் நடித்திருக்கின்றனர்.

2 விதமான தோற்றங்களில்

2 விதமான தோற்றங்களில்

ஆரம்பத்தில் கணேஷாக வரும் அஜித், பிளாஷ்பேக் காட்சிகளில் டானாக வருகிறாராம். கணேஷ் கதாபாத்திரம் முழுவதும் கொல்கத்தாவிலும், டான் கதாபாத்திரத்தை சென்னையிலும் சிறுத்தை சிவா படமாக்கியிருக்கிறார். அனிருத் பிறந்தநாளை முன்னிட்டு நாளை படத்தின் பாடல்களை படக்குழுவினர் வெளியிடுகின்றனர். வேதாளம் தீபாவளி வெளியீடாக திரைக்கு வரவிருக்கிறது.

English summary
Ajith's Vedhalam Secrets Now Revealed. Ajith Character Name Ganesh, He plays a Dual Character in this film.Thambi Ramaiah Plays Ajith and Lakshmi Menon Father, Appukutty Plays Ajith's Friend.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil