»   »  அஜித் பேசப்போற ஸ்லாங் இதுதான்... 'விசுவாசம்' கதைக்களம் பற்றி கசிந்த தகவல்!

அஜித் பேசப்போற ஸ்லாங் இதுதான்... 'விசுவாசம்' கதைக்களம் பற்றி கசிந்த தகவல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
விசுவாசம்' கதைக்களம் பற்றி கசிந்த தகவல்!

சென்னை : அஜித்தின் 58-வது படமான 'விசுவாசம்' சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் உருவாக இருக்கிறது.

இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ரசிகர்கள் பலரும் இந்தப் படத்தின் அப்டேட் தெரிந்துகொள்ள ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில், இப்படத்தின் கதைக்களம் வட சென்னை எனும் தகவல் வெளியாகி இருக்கிறது.

இயக்குநர் சிவா

இயக்குநர் சிவா

அஜித் ரசிகர்கள் 'விசுவாசம்' படம் பற்றி மேற்கொண்டு எந்தத் தகவலும் வெளியாகாததால் கவலையில் உள்ளார்கள். இப்படத்தின் திரைக்கதை டிஸ்கஷன் நடந்து வருவதாகவும் கூடிய விரைவில் முடித்துவிட்டு அடுத்த நான்கு மாதங்களில் ஷூட்டிங்கை முடிப்பதாகவும் கூறியுள்ளார் சிவா.

அப்டேட்?

அப்டேட்?

ஆனால், 'விசுவாசம்' படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் / யுவன் ஷங்கர் ராஜா இல்லை என்றாலும் அனிருத்தையாவது இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்வார்கள் என அஜித் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

ஹீரோயின்

ஹீரோயின்

அதே போல, முன்னணி நாயகி யாராவது ஒருவர் நடித்தால் அஜித்துக்குப் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறார்கள். அது பற்றிய எந்த அறிவிப்பும் இதுவரை 'விசுவாசம்' படக்குழு தரப்பிலிருந்து வெளியிடப்படவில்லை.

கதைக்களம்

கதைக்களம்

இந்நிலையில், அஜித்தின் விசுவாசம் படத்தின் கதைக்களம் நார்த் மெட்ராஸ் என ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போது வந்த தகவல் படி வருகிற பிப்ரவரி 22-ம் தேதி படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

English summary
Ajith's 58th film 'Viswasam' will be directed by Shiva. Many of his fans are eagerly waiting for the update of this film. In this case an update was leaked, Ajith’s Viswasam to feature North Chennai as backdrop.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil