லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வரார்...மீண்டும் நடிக்க வருகிறார் ஷாலினி...அதுவும் இந்த படத்திலா ?

சென்னை : தல அஜித்தின் மனைவி ஷாலினி மீண்டும் நடிக்க வருகிறார். அதுவும் மெகா ப்ராஜெட் படத்தில் நடிக்க போகிறார் என்ற தகவல் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

1980 களில் தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய தென்னிந்திய மொழி சினிமாக்களில் குழந்தை நட்சத்திரமாக கலக்கியவர் ஷாலினி. பிறகு வளர்ந்து, காதலுக்கு மரியாதை, அலைபாயுதே, அமர்க்களம், கண்ணுக்குள் நிலவு, பிரியாத வரம் வேண்டும் உள்ளிட்ட சில படங்களில் ஹீரோயினாக நடித்தார்.

20 ஆண்டுகளுக்கு பின் ரீஎன்ட்ரி

20 ஆண்டுகளுக்கு பின் ரீஎன்ட்ரி

பிறகு அஜித்தை காதலித்து திருமணம் செய்து கொண்ட ஷாலினி, சினிமாவில் இருந்து விலகி இருந்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. கிட்டதட்ட 20 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் நடிக்க வருகிறாராம் ஷாலினி.

பொன்னியின் செல்வன் படத்திலா

பொன்னியின் செல்வன் படத்திலா


அதுவும் மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் தான் ஷாலினி மீண்டும் நடிக்க வருகிறாராம். சிறிய ரோல் என்றாலும் வலுவான கேரக்டரில் நடிக்கிறாராம் ஷாலினி. இதை மறைமுகமாக ஷாலினியே உறுதி செய்துள்ளாராம்.

 2022 ல் படம் ரிலீஸ்

2022 ல் படம் ரிலீஸ்

லைகா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் பொன்னியின் செல்வம் படம் 2022 ரிலீஸ் ஆக உள்ளது. ஆனால் ரிலீஸ் தேதி பற்றி படக்குழு எந்த தகவலையும் இதுவரை வெளியிடவில்லை. முதல் பாகத்தை தொடர்ந்து இரண்டாம் பாகமும் ஒரு சில மாதங்களில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

புதுச்சேரியில் விறுவிறு ஷுட்டிங்

புதுச்சேரியில் விறுவிறு ஷுட்டிங்

கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், பிரபு, ஐஸ்வர்ய லட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்து வரும் பொன்னியின் செல்வன் படத்தின் ஷுட்டிங் பல மாதங்களுக்கு பிறகு துவங்கி, தற்போது புதுச்சேரியில் நடந்து வருகிறது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்கள்

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்கள்

இதைத் தொடர்ந்து அடுத்த கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடிக்க உள்ளது. ஃபஸ்ட்லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மோஷன் போஸ்டர், பாடல்கள் விறுவிறுப்பாக தயாராகி வருகிறதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X