»   »  நாலே நாளில் ரூ.50 கோடியை தாண்டியது 'என்னை அறிந்தால்' வசூல்! செஞ்சுரியை நோக்கி அஜித்!!

நாலே நாளில் ரூ.50 கோடியை தாண்டியது 'என்னை அறிந்தால்' வசூல்! செஞ்சுரியை நோக்கி அஜித்!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அஜித் நடித்து வெளியாகியுள்ள என்னை அறிந்தால் திரைப்படம், அவரது திரையுலக பயணத்தில் மறக்க முடியாத வசூல் சாதனை படமாக மாறியுள்ளது. கடந்த வியாழக்கிழமை தொடங்கி இந்த வார இறுதிவரையிலான நான்கே நாட்களில் அப்படம், நாடு முழுவதிலும், ரூ.52 கோடியை தாண்டி வசூலித்துள்ளது.

முன்னணி நட்சத்திரங்கள்

முன்னணி நட்சத்திரங்கள்

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், அஜித், திரிஷா, அனுஷ்கா, பார்வதி நாயர், அருண் விஜய், விவேக் உள்ளிட்ட பலர் நடிக்க கடந்த வியாழக்கிழமை வெளியானது என்னை அறிந்தால்.


முதல் நாள் வசூலில் மூன்றாமிடம்

முதல் நாள் வசூலில் மூன்றாமிடம்

தமிழகத்தில் படத்தின் முதல் நாள் வசூல் ரூ.10.5 கோடியாக இருந்தது. லிங்கா முதல் நாளில் ரூ.12.8 கோடியும், கத்தி முதல் நாளில் ரூ.12.5 கோடியும் வசூலித்து இருந்த நிலையில், முதல் நாள் வசூலில் மூன்றாம் இடத்தை என்னை அறிந்தால் பிடித்துள்ளது. ஆனால் மற்ற இரு படங்களும், வெள்ளிக்கிழமை வெளியான நிலையில், என்னை அறிந்தால், திரைப்படம், வியாழக்கிழமையே வெளியாகிவிட்டது. எனவே வார இறுதி கலெக்ஷன் எப்படி என்பதை திரையுலக புள்ளி விவர நிபுணர்கள் ஆராய ஆரம்பித்தனர்.


'தலை' நகரான தலைநகர்

'தலை' நகரான தலைநகர்

'தலை'நகர் சென்னையில் மட்டும் கடந்த நான்கு நாட்களில் என்னை அறிந்தால் திரைப்படம் ரூ.2.18 கோடிகளை வசூலித்துள்ளதாம்.


அமெரிக்காவிலுமா..

அமெரிக்காவிலுமா..

அமெரிக்காவில் எந்த ஒரு அஜித் படத்தைவிடவும் அதிக வசூலை வாரி குவித்துள்ளது என்னை அறிந்தால். அங்கு, ரூ.2.6 கோடி வசூலித்துள்ளது.


வீக் என்ட் வசூல்

வீக் என்ட் வசூல்

இந்தியாவில் மட்டும் கடந்த நான்கு நாட்களில் இப்படம் ரூ.52.68 கோடிகளை வசூலித்துள்ளது. இதன் மூலம் வரும் நாட்களில் ரூ.100 கோடி வசூலை கடந்து, ரூ.100 கோடி கிளப்பில் என்னை அறிந்தால் படமும் இடம் பிடிக்கும் என்று ஆரூடம் கூறுகின்றனர் கோலிவுட்நிபுணர்கள்.


English summary
We had earlier informed you that Thala Ajith's Yennai Arindhaal enjoyed a massive opening not only in Tamil Nadu but also overseas making it the highest grosser on its first day for any Ajith movie. Yennai Arindhaal's box office collections on its second(2nd), third(3rd) and fourth(4th) day has been equally good if not better.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil