நோ Means நோ...செல்ஃபி கேட்ட பெண்ணிற்கு அஜித்தின் ஸ்டையிலான ரிப்ளை

சென்னை : கேமிராக்களில் மிக அரிதாக சிக்கும் பிரபலம் என்றால் அது நம்ம அஜித் தான். இருந்தாலும் அவர் பற்றிய வீடியோக்கள், போட்டோக்கள் என எது வெளியே வந்தாலும் உடனடியாக அது டிரெண்டிங் ஆகிவிடும்.

Recommended Video

ஒரு செகண்ட் அமைதியாக நின்ற அஜித்.. என்ன பணிவு.. இணையத்தில் டிரெண்டாகும் வீடியோ !

அஜித் என்றால் எப்போதும் மாஸ் இருக்கும். தற்போது வலிமை படத்திற்கு பிறகு அது பல மடங்காக அதிகரித்துள்ளது. வலிமை படத்திற்கு அப்டேட் கேட்டே அஜித் ரசிகர்கள் அந்த படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை அனைவரிடமும் தூண்டி விட்டனர்.

அஜித்தை யாரென்றே தெரியாத வெளிநாட்டினரும் கூட, யாருய்யா அந்த அஜித். அப்படி என்ன தான்ய்யா இருக்கு அந்த வலிமை படத்தில் என ஆர்வமாக கேட்க துவங்கி விட்டனர். அந்த அளவிற்கு அஜித்திற்கு தனி மாஸ் உருவாக்கி விட்டனர். வலிமையை தொடர்ந்து தற்போது ஏகே 61 படத்திற்கும் அதே நிலை தொடர்கிறது.

மூன்றாவது முறையாக கூட்டணி

மூன்றாவது முறையாக கூட்டணி

அஜித் தற்போது டைரக்டர் ஹெச்.வினோத் இயக்கும் ஏகே 61 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடித்து வருகிறார். நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களைத் தொடர்ந்து ஹெச்.வினோத், போனி கபூர், அஜித் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் இது. இந்த படத்தின் ஷுட்டிங் ஏப்ரல் மாதம் துவங்கி நடைபெற்று வருகிறது.

 புனே சென்ற ஏகே 61 டீம்

புனே சென்ற ஏகே 61 டீம்

47 நாட்களாக ஐதராபாத்தில் இரவு, பகல் பாராமல் ஏகே 61 ஷுட்டிங் நடைபெற்றது. சென்னை மவுண்ட் ரோடு போன்ற அமைக்கப்பட்ட பிரம்மாண்ட செட்டில் நடத்தப்பட்ட முதல் கட்ட ஷுட்டிங் சமீபத்தில் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து சிறிது பிரேக்கிற்கு பிறகு இரண்டாம் கட்ட ஷுட்டிங் இன்று புனேயில் துவங்குகிறது.

80 சதவீதம் ஷுட்டிங் ஓவர்

80 சதவீதம் ஷுட்டிங் ஓவர்

ஏகே 61 படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். இதனால் படப்பிடிப்பிற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 80 சதவீதம் ஷுட்டிங் முடிந்து விட்டதாம். இன்னும் 10 முதல் 15 நாட்கள் வரையிலான ஷுட்டிங் மட்டுமே மீதம் உள்ளதாம். ஏகே 61 படத்திற்காக அஜித் 25 கிலோ வரை உடல் எடையை இயற்கை முறையில் குறைத்துள்ளார்.

 தொடர்ந்து டிரெண்டிங்கில் அஜித்

தொடர்ந்து டிரெண்டிங்கில் அஜித்

உடல் எடையை குறைத்து செம ஃபிட்டாக, அதே சமயம் வெள்ளை தாடி என வேற லெவல் லுக்கில் அசத்தி வருகிறார். இவரின் லேட்டஸ்ட் லுக் போட்டோக்கள் அடிக்கடி இணையத்தில் கசிந்து டிரெண்டாவது வழக்கமாகி விட்டது. ரசிகர்களுடன் தயங்காமல் அஜித் செல்ஃபி எடுத்துக் கொள்ளும் போட்டோக்கள் வெளியாகி வருகின்றன.

அஜித்திடம் செல்ஃபி கேட்ட பெண்

அஜித்திடம் செல்ஃபி கேட்ட பெண்

வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து, உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள ஏகே 61 படத்தின் இரண்டாம் கட்ட ஷுட்டிங்கிற்காக அஜித் நேற்று புனே புறப்பட்டு சென்றார். அப்போது ஏர்போர்ட்டில் விமான நிலைய பெண் ஊழியர் ஒருவர் அஜித்திடம் செல்ஃபி எடுக்க வேண்டும் என கேட்டுள்ளார்.

நோ சொல்லி sorry சொன்ன அஜித்

ஆனால் அஜித் அவசரமாக சென்றதால், அதற்கு நோ சொல்லி மறுத்துள்ளார். இருந்தாலும், போகிற அவசரத்திலும் அந்த பெண்ணை திரும்பிப் பார்த்து Sorry மா என சொல்லி விட்டு சென்றுள்ளார். இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வெளியாகி செம டிரெண்டாகி வருகிறது. இந்த வீடியோவை அஜித் ரசிகர்கள் கொண்டாடி, வாழ்த்துக்களையும் லைக்குகளையும் குவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X