»   »  கோடிக்கு மசியாத அஜீத்: நயனுக்காக முத்தையாவை டீலில்விட்ட சூர்யா

கோடிக்கு மசியாத அஜீத்: நயனுக்காக முத்தையாவை டீலில்விட்ட சூர்யா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜீத் நடிக்க மறுத்ததை அடுத்து நயன்தாரா மேற்கொண்ட தீவிர முயற்சியால் தான் சூர்யா நடிக்க ஒப்புக் கொண்டுள்ளாராம்.

கோலிவுட்டின் முன்னணி நடிகையான நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனின் படத்தை தயாரிக்க முடிவு செய்துள்ளார். பெரிய மாஸ் ஹீரோவாக தேர்வு செய்தால் விக்னேஷுக்கு ஒரு பிரேக் கிடைக்கும் என நினைத்தார் நயன்.

இதையடுத்து எப்படியாது அஜீத்தை நடிக்க வைக்க வேண்டும் என்று முடிவு செய்து களத்தில் இறங்கினார்.

அஜீத்

அஜீத்

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வரும் அஜீத்து விக்னேஷ் சிவன் படத்தில் நடிக்க முடியாது என்பதை நாசுக்காக தெரிவித்துள்ளார். தினமும் ரூ. 1 கோடி சம்பளம் தருகிறேன் என்று நயன் கூறியும் அஜீத் மசியவில்லை.

நயன்தாரா

நயன்தாரா

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்தால் படப்பிடிப்பின்போது படம் பற்றிய செய்திகளை விட நயன்-விக்னேஷின் காதல் பற்றி தான் செய்திகள் வரும் என்று நினைத்த அஜீத் அந்த படத்தில் நடிக்க விரும்பவில்லையாம்.

சூர்யா

சூர்யா

அஜீத் நடிக்க மறுத்த செய்தியை கேட்டு விக்னேஷ் கவலை அடைந்தாராம். இதையடுத்து நயன்தாரா மனம்தளராமல் சூர்யாவை அணுகி எனக்கு ஒரு படம் பண்ணிக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.

முத்தையா

முத்தையா

நான் எஸ் 3 படத்தை முடித்துவிட்டு முத்தையா படத்தில் நடிக்க உள்ளேனே என்று சூர்யா கூற ப்ளீஸ் ஏதாச்சும் செய்யுங்க என்று நயன் கேட்டாராம். இதையடுத்து தான் சூர்யா முத்தையாவை விட்டுவிட்டு விக்னேஷ் சிவன் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

English summary
After Ajith refused to act in Vignesh Shivan's movie, Suriya accepted the offer for good friend Nayanthara.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil