பைக் டூர்.. ஏகே61 ஷூட்டிங்.. அடுத்தது என்ன தெரியுமா? படு பிசியாக உள்ள அஜித்.. டிரெண்டாகும் வீடியோ!

சென்னை: நடிகர் அஜித்தின் ஏகே 61 படத்தின் பேங்க் செட்டப் வீடியோவே வெளியாகி ரசிகர்களை ஷாக் ஆக்கிய நிலையில், தொடர்ந்து ஏகப்பட்ட வீடியோக்கள் வெளியாகி வருகின்றன.

ஆதி - நிக்கி கல்ராணி திருமணம், நயன்தாரா திருமணத்தில் எல்லாம் கலந்து கொள்ளாமல் டபுள் கால்ஷீட் போட்டு ஏகே 61 படப்பிடிப்பில் படு பிஸியாக நடித்து வந்தார் அஜித்.

திடீரென அடுத்தக்கட்ட ஷூட்டிங் தொடங்க சற்றே காலதாமதம் ஆவதை அறிந்து கொண்ட நிலையில், ஐரோப்பாவிற்கு பைக் டூர் கிளம்பி விட்டார்.

ஏமாற்றிய வலிமை

ஏமாற்றிய வலிமை

பறந்து பறந்து அஜித் பைக் ஓட்டி நடித்ததெல்லாம், திரைக்கதை சற்றே வீக்கான நிலையில், ரசிகர்களையும் அஜித்தையும் மொத்தமாக ஏமாற்றி விட்டது. இந்த ஆண்டின் மிகப்பெரிய இண்டஸ்ட்ரி ஹிட் படமாக வந்திருக்க வேண்டிய வலிமை திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றிப் பெற்றாலும், விமர்சன ரீதியாக மிகப்பெரிய சரிவை சந்தித்தது. விவேகம் படத்திற்கும் இதே போன்றதொரு நிலைமை வந்த நிலையிலும், அடுத்ததாக இயக்குநரை மாற்றாமல் அவருக்கே வாய்ப்புக் கொடுக்க விஸ்வாசம் எனும் பிளாக்பஸ்டர் படம் கிடைத்தது.

ஏகே 61 பந்தயம் அடிக்கும்

ஏகே 61 பந்தயம் அடிக்கும்

சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று போன்ற படங்களை இயக்கி ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் இதயத்தையும் பிடித்த இயக்குநர் ஹெச். வினோத் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட படங்கள் மூலம் அஜித் ரசிகர்களை திருப்திப்படுத்தாத நிலையில், ஏகே61 படம் நிச்சயம் பந்தயம் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐரோப்பாவில் அஜித்

ஐரோப்பாவில் அஜித்

இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் பைக் டூர் நடத்தினார் நடிகர் அஜித். அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி டிரெண்டாகின. லண்டன் கடையில் நடிகர் அஜித் பெண் ஒருவருக்கு வழி விட்ட வீடியோ கூட சமூக வலைதளத்தில் வெளியாகி வேற லெவலில் டிரெண்டானது. தொடர்ந்து அஜித்தின் புகைப்படங்களும் வீடியோக்களும் வெளியாவதே ஒரு பப்ளிசிட்டி ஸ்டன்ட் தான் என்கிற விமர்சனத்தை ப்ளூ சட்டை மாறன் உள்ளிட்ட பலர் முன் வைத்தனர்.

பேங்க் செட்

பேங்க் செட்

ஏற்கனவே புனே மேம்பாலத்தில் பைக் ஸ்டன்ட் காட்சி ஒன்று படமாக்கப்பட்ட வீடியோக்கள் கசிந்து பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது ஏகே 61 படத்திற்காக ஹைதராபாத்தில் அமைக்கப்பட்டுள்ள மவுண்ட் ரோடு செட்டும், அதில் போடப்பட்டுள்ள பேங்க் செட் வீடியோவும் சமூக வலைதளங்களில் கசிந்து காட்டுத் தீ போல பரவி வருகிறது. பேங்க் ஹெயிஸ்ட் கதை தான் என்பது இதன் மூலம் திட்டவட்டமாக உறுதியாகி உள்ள நிலையில், படத்திற்கு வங்கி என பெயர் வைக்கப் போகிறார்களா? என்றும் கேள்விகளை எழூப்பி உள்ளனர்.

துப்பாக்கியை தூக்கிய அஜித்

துப்பாக்கியை தூக்கிய அஜித்

பைக் டூர், ஏகே 61 ஷூட்டிங் என பிசியாகி உள்ள நடிகர் அஜித் தற்போது ரைஃபிள் கிளப்பில் துப்பாக்கியும் கையுமாக இருக்கும் புதிய வீடியோ ஒன்று வெளியாகி டிரெண்டாகி வருகிறது. மேலும், விமான நிலையத்தில் அவர் வந்து செல்லும் ஏகப்பட்ட வீடியோ காட்சிகள் வெளியாகி அஜித் ரசிகர்களை தொடர்ந்து ஹேப்பி மோடிலேயே வைத்திருக்கிறது.

உடல் எடை அதிகரிப்பு

உடல் எடை அதிகரிப்பு

ஏகே 61 படத்திற்காக நடிகர் அஜித் 25 கிலோ உடல் எடையை குறைத்து நடித்து வருகிறார் என்றும், சமீபத்தில், நடிகர் அஜித் செம ஃபிட்டாக இருக்கும் ஒரு புகைப்படமும் வெளியாகி டிரெண்டான நிலையில், தற்போது வெளியாகி உள்ள வீடியோக்களில் உடல் எடை ரொம்பவே அதிகரித்து நடிகர் அஜித் காணப்படுவதாக ட்ரோல்களும் குவிந்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X