»   »  ஷாலினி அஜீத்துக்கு ஆண் குழந்தை பிறந்தது.. தாயும் சேயும் நலம்!

ஷாலினி அஜீத்துக்கு ஆண் குழந்தை பிறந்தது.. தாயும் சேயும் நலம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அஜீத்தின் மனைவி ஷாலினி இன்று அதிகாலை ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.

அஜீத், ஷாலினி ஆகியோர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அன்பின் அடையாளமாக அவர்களுக்கு அனௌஷ்கா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் ஷாலினி இரண்டாவது முறையாக கர்ப்பமானார். என்னை அறிந்தால் படத்தை முடித்த கையோடு அஜீத் சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் கர்ப்பிணியான ஷாலினியுடன் இருக்க அவர் 2 மாதம் பிரேக் எடுத்துள்ளார்.

Ajith, Shalini blessed with a baby boy

இந்நிலையில் ஷாலினிக்கு பிரசவ வலி எடுத்துள்ளது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். இன்று அதிகாலை 4.30 மணிக்கு அவர் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். தாயும், சேயும் நலமாக உள்ளனர் என்று தகவல் கிடைத்துள்ளது.

அஜீத்தின் அடுத்த படம் வரும் ஏப்ரல் மாதம் 14ம் தேதி பூஜையுடன் துவங்குகிறது. அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாஸன் நடிக்கிறார். படத்தில் சந்தானமும் உள்ளார் என்று தெரிய வந்துள்ளது.

அஜீத், ஷாலினி தம்பதிக்கு ரசிகர்கள், பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

English summary
Shalini Ajith has given birth to a baby boy on march 2.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil