அஜித் – ஷாலினியின் 22வது திருமண நாள்... வேற லெவலில் அமர்க்களப்படுத்தும் ரசிகர்கள்

சென்னை : ரசிகர்கள் நடிகர் அஜித்குமார், நடிகை ஷாலினியின் 22 வது திருமண நாளை இன்று சோஷியல் மீடியாவில் வேற லெவலில் அமர்க்களமாக கொண்டாடி வருகிறார்கள். இந்த தம்பதிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

1990 ம் ஆண்டு என் வீடு என் கணவர் என்ற படத்தில் பள்ளி சிறுவனாக சிறிய ரோலில் நடித்து சினிமாவிற்கு வந்தவர் அஜித். மூன்று ஆண்டுகளுக்கு பிறகு 1993 ல் அமராவதி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இந்த படத்திற்கு பிறகு பைக் விபத்தில் படுகாயம் அடைந்த அஜித், சில ஆண்டுகள் சினிமாவில் ஹீரோக்களுக்கு வாய்ஸ் கொடுத்து டப்பிங் கலைஞராக பணியாற்றினார்.

அஜித்தின் முதல் வெற்றி

அஜித்தின் முதல் வெற்றி

பாசமலர்கள், ராஜாவின் பார்வையிலே, பவித்ரா போன்ற படங்களில் கேரக்டர் ரோல்களில் நடித்து வந்த அஜித்திற்கு ஆசை படம் முதல் கமர்ஷியல் வெற்றியை தந்தது. அதற்கு பிறகு 1996 ல் நடித்த காதல் கோட்டை படத்தின் பிரம்மாண்ட வெற்றி அஜித்தை புகழின் உச்சிக்கே கொண்டு போனது. அதற்கு பிறகு தொடர்ந்து பல வெற்றி படங்களைக் கொடுத்தார். தீனா, சிட்டிசன் படங்களுக்கு பிறகு ஆக்ஷன் ஹீரோவாக, டாப் ஹீரோக்களில் ஒருவராக வளர்ந்தார் அஜித்.

ஷாலினியை பார்த்து பயந்த அஜித்

ஷாலினியை பார்த்து பயந்த அஜித்

1999 ம் ஆண்டு சரண் இயக்கிய அமர்க்களம் படத்தில் நடித்த போது, அந்த படத்தில் ஹீரோயினாக நடித்த ஷாலினி மீது அஜித்திற்கு காதல் ஏற்பட்டது. இதனால் டைரக்டர் சரணிடமே சென்று, படத்தை சீக்கிரம் முடித்து விடுங்கள். இந்த பொண்ணு மீது எனக்கு லவ் வந்திருமோன்னு பயமா இருக்கு என சொல்லி உள்ளார் அஜித். அந்த சமயத்தில் அஜித் - ஷாலினி பற்றி பல கிசுகிசுக்களும் எழுந்தது. நடிகர் ரமேஷ் கண்ணாவும் அஜித்திடம், நடிகையை திருமணம் செய்து கொள்ளாதே என அட்வைஸ் வழங்கி உள்ளார்.

அஜித்தை ஓகே செய்த ஷாலினி

அஜித்தை ஓகே செய்த ஷாலினி

ஆனால் 1999 ம் ஆண்டு ஜுன் மாதம் ஷாலினியிடம் தனது காதலை சொல்லி உள்ளார் அஜித். ஷாலினியும் உடனடியாக அதை ஏற்றுக் கொண்டதால், பெற்றோர்களிடம் பேசி 2000 ம் ஆண்டு ஏப்ரல் 24 ம் தேதி இவர்களின் திருமணம் நடைபெற்றது. தென்னிந்திய மொழி சினிமாக்களில் பிரபலமான குழந்தை நட்சத்திரமாக இருந்து, பிறகு டாப் ஹீரோயினாக வளர்ந்த ஷாலினி, திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகி இருந்து வருகிறார். இந்த தம்பதிக்கு அனெளஸ்கா, ஆத்விக் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

22 ஆண்டுகள் ஆகிவிட்டதா

22 ஆண்டுகள் ஆகிவிட்டதா

அஜித்-ஷாலினுக்கு திருமணமாகி 22 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. அழகான காதல் தம்பதிகளான இவர்கள் பற்றிய சுவாரஸ்ய தகவல், குடும்ப போட்டோ என எது வெளியில் வந்தாலும் உடனடியாக சோஷியல் மீடியாவில் டிரெண்ட் ஆகி விடுகிறது. சமீபத்தில் கூட அஜித் - ஷாலினியின் குடும்ப போட்டோ, அஜித்-ஷாலினியின் ரொமான்டிக் போட்டோ என பலவும் அடுத்தடுத்து டிரெண்டிங் ஆனது.

டிரெண்டில் தெறிக்க விடும் ரசிகர்கள்

டிரெண்டில் தெறிக்க விடும் ரசிகர்கள்

அஜித்-ஷாலினியின் திருமண நாளை முன்னிட்டு சோஷியல் மீடியாவில் இவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இவர்களின் திருமண நாளை முன்னிட்டு #AK61,#AjithKumar போன்ற ஹேஷ்டேக்குகள் ட்விட்டர் டிரெண்டிங்கில் டாப் இடத்தில் இருந்து வருகின்றன. அஜித்-ஷாலினியின் திருமண போட்டோக்கள், அரிய போட்டோக்களை பகிர்ந்து ரசிகர்கள் வாழ்த்து சொல்லி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X