Don't Miss!
- News
நான் கிரிக்கெட் வீரர்! பவுலர்களை பார்த்து பயந்தால் வேலைக்கு ஆகுமா! அமமுக வேட்பாளர் சிவபிரசாத் பளிச்!
- Technology
யூஸ் பண்றீங்களோ இல்லயோ.. உங்க லேப்டாப்பில் இந்த வெப் ப்ரவுஸர் இருக்கா? அப்போ அலெர்ட் ஆகிக்கோங்க!
- Lifestyle
வாய் துர்நாற்றத்திற்கு குட்-பை சொல்லணுமா? இதோ அதை தடுக்கும் சில இயற்கை வழிகள்!
- Sports
"அந்த ஒரு விஷயம்.. உலகில் சூர்யகுமாரிடம் மட்டுமே உள்ள திறமை.. ரிக்கிப் பாண்டிங் புகழாரம் - விவரம்
- Automobiles
டாடாவை கதையை முடிக்க பிளான்... ரயிலைபோல் அடுத்தடுத்து ஆறு எலெக்ட்ரிக் கார்களை களமிறக்கு போகிறது மாருதி சுஸுகி!
- Finance
2 நாளில் 12 லட்சம் கோடி ரூபாய் அவுட்.. சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் சரிவில் முடிவு..!
- Travel
சூரிய சுற்றுலாவா? இது என்ன புதிய சுற்றுலாவா இருக்கே – இதை பார்க்க எங்கு செல்வது?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
இணையத்தில் தீயாய் பரவும் அஜித்–ஷாலினி ரொமான்டிக் போட்டோ...பகிர்ந்தது யாருன்னு தெரியுமா?
சென்னை : தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பிறகு ஹீரோயின் ஆனவர் ஷாலினி. சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் விஜய், அஜித், மாதவன், பிரசாந்த் என அப்போதைய இளம் டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து கலக்கினார்.
இதே போல் அமராவதி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் அஜித். ஆரம்பத்தில் இவர் நடித்த படங்கள் பேசப்படாமல் இருந்த நிலையில் ஆசை, காதல் மன்னன் போன்ற படங்கள் இவருக்கு பெரிய பிரேக் கொடுத்து இமேஜை உயர்த்தின. காதல் மன்னன், காதல்கோட்டை படங்களுக்கு பிறகு இளம் பெண்களின் காதல் மன்னனாக இருந்து, பிறகு டாப் ஹீரோவாக உயர்ந்தார் அஜித்.
“சுஷாந்த் சிங்கின் மரணம் ஒரு திட்டமிட்ட தற்கொலை“… ஆதங்கத்தை வெளிப்படுத்திய கஸ்தூரி !
அமர்க்களம் படத்தில் சேர்ந்து நடித்த போது அஜித்-ஷாலினி இடையே காதல் ஏற்பட்டது. 2000 ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கிய ஷாலினி மீண்டும் நடிக்க வரப் போவதாக சமீபத்தில் தகவல்கள் பரவின. ஆனால் இதுவரை ஷாலினி தரப்பில் இருந்து அதுபற்றி எந்த உறுதியான தகவலும் இல்லை.

அரிதாக வரும் ஷாலினி போட்டோஸ்
திருமணத்திற்கு பிறகு மிக அரிதாகவே ஷாலினியின் போட்டோக்கள் வெளியில் வந்தன. அஜித்துடன் கார் ரேஸ் நடக்கும் இடங்களுக்கு செல்வது, ஷட்டில் விளையாட போவது, விழாக்களுக்கு செல்வது, தேர்தல் சமயத்தில் ஓட்டளிக்க போவது போன்று மிக அரிதாகவே ஷாலினியின் போட்டோக்கள் வெளிவந்தன. சமீப காலமாக அஜித் குடும்பத்துடன் இருக்கும் போட்டோக்கள், அஜித் மகளின் போட்டோக்கள் வெளிவருகின்றன.

அஜித்-ஷாலினி ரொமான்ஸ் போட்டோ
அப்படி சமீபத்தில் தங்கள் மகனின் பிறந்தநாளை கொண்டாட ஓட்டலுக்கு சென்ற போது அஜித்தும்-ஷாலினியும் இணைந்து செல்ஃபி எடுத்துக் கொண்ட போட்டோ ஒன்று வெளியாகி செம வைரலானது. அதைத் தொடர்ந்து தற்போது முதல் முறையாக அஜித்-ஷாலினி நெருக்கமாக இருக்கும் ரொமான்டிக் போட்டோ ஒன்று இணையத்தில் படுவேகமாக பரவி வருகிறது. இது அனைவருக்கும் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் தந்துள்ளது. சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் படத்தின் எஃபெக்டா என தெரியவில்லை. இந்த போட்டோவை உடனடியாக டெலிட் செய்ய சொல்லி அஜித் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

என்னது இவர் தான் வெளியிட்டாரா
இந்த போட்டோ ஒரு பக்கம் ஷாக் கொடுக்கிறது என்றால், மற்றொரு பெரிய ஷாக் இதை பகிர்ந்தது யார் என்பது தான். இந்த போட்டோவை சோஷியல் மீடியாவில் பகிர்ந்தது வேறு யாரும் இல்லை. அஜித்தின் மச்சினியும், ஷாலினியின் தங்கையும், நடிகையுமான ஷாமிலி தான். அஜித் - ஷாலினிக்கு திருமணமாகி 23 ஆண்டுகள் ஆகி விட்டதாம் இதை சொல்வதற்காக தான் இந்த ரொமான்டிக் போட்டோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதற்கு தாறுமாறாக லைக்குகளும் குவிந்து வருகிறது.
Recommended Video

இதற்காக தான் இந்த போஸா
அஜித், நீண்ட வெள்ளை தாடியுடன் ஏகே 61 கெட்அப்பில் இருப்பதால் இது சமீபத்தில் எடுக்கப்பட்டது என்பது உறுதியாகி உள்ளது. இது couple goal நிகழ்விற்காக எடுக்கப்பட்ட போட்டோ என கூறப்படுகிறது. இருந்தாலும் ப்ளூ லைட் எஃபெக்டில் எடுக்கப்பட்ட இந்த ரொமான்டிக் போட்டோவை பாராட்டியும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.