»   »  தல 57: பல்கேரியாவிற்கு படமெடுக்க கிளம்பும் அஜீத் டீம்

தல 57: பல்கேரியாவிற்கு படமெடுக்க கிளம்பும் அஜீத் டீம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அஜீத் நடிக்கவிருக்கும் 'தல 57' படம் ஒரு ஹாலிவுட் ரேஞ்சுக்கு இருக்கும் என்று பரவலாக பேசப்படுகிறது. படப்பிடிப்புக்காக பல்கேரியாவிற்கு கிளம்புகிறது தல டீம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

வீரம், வேதாளம் படங்களைத் தொடர்ந்து அஜித்-சிறுத்தை சிவா 3-வது முறையாக 'தல 57' படத்திற்காக இணைந்துள்ளனர்.

Ajith to shoot in Bulgaria next week

இந்திய நாட்டின் ராணுவ ரகசியங்களை வெளிநாடுகளில் கசியவிடும் துரோகிளை தேடிக் கண்டுபிடித்து, அவர்களைப் பழிவாங்கும் உளவாளி வேடத்தில் அஜித் நடிக்கவிருக்கிறாராம்.

அஜித்தின் உடல்நிலை காரணமாக தள்ளிப்போன 'தல 57' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஆகஸ்ட் 2ம் தேதி பல்கேரியாவில் துவங்கவுள்ளதாக கூறப்படுகிறது. அங்கு இப்படத்தின் முக்கிய காட்சிகளை சுமார் 40 நாட்கள் படம்பிடிக்கவுள்ளனராம். ஐ

பல்பேரியாவில் படப்பிடிப்பு

ஐரோப்பாவின் மிகப்பெரிய ஸ்டுடியோக்களில் ஒன்றான 'நிபோயனா'வில் இப்படப்பிடிப்பை நடத்திட படக்குழு முடிவு செய்துள்ளதாம். இந்த ஸ்டுடியோவில் ஹாலிவுட்டில் புகழ்பெற்ற படங்களான '300 ரைஸ் ஆப் ஆன் எம்பையர்', 'தி எக்ஸ்பெண்டபிள்ஸ்(2&3)', 'லண்டன் ஹேஸ் பாலன்' போன்ற படங்களின் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர்.

தல 57

ஷாருக்கானின் தில்வாலே திரைப்படம் இந்த ஸ்டுடியோவில் படம்பிடிக்கப்பட்ட முதல் இந்தியப் திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. தற்போது தல 57 படத்தின் படப்பிடிப்பு இங்கே நடைபெறும் பட்சத்தில் 'நிபோயனா'வில் படம்பிடிக்கப்படும் முதல் தமிழ் மற்றும் தென்னிந்தியத் திரைப்படம் என்ற பெருமை அஜித் படத்திற்கு கிடைக்கும் என்று பேசிக் கொள்கின்றனர்.

2 கதாநாயகிகள்

தல 57வது படத்தில், 2 கதாநாயகிகள் இருக்கிறார்கள். ஒரு கதாநாயகியாக காஜல் அகர்வாலும், இன்னொரு கதாநாயகியாக அக்ஷராஹாசனும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. தம்பி ராமய்யா, கருணாகரன் ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

வில்லன் யார்?

வில்லன் வேடத்துக்கு முக்கிய நடிகர் ஒருவருடன் பேச்சுவார்த்தை நடக்கிறது. படப்பிடிப்பு பல்கேரியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நடைபெற இருக்கிறது.படத்தில் முக்கிய வில்லன் வேடத்திற்கு அரவிந்த சாமியிடம் பேசப்பட்டதாகவும் ஆனால் அஜீத் வேண்டாம் என்று கூறிவிட்டதாகவும் பரவலாக பேசப்படுகிறது.

2017 ஏப்ரல் ரிலீஸ்?

இது, சர்வதேச குற்றம் தொடர்பான திகில் படம். அனிருத் இசையமைக்கிறார். இவருடைய இசையில், ஒரு பாடல் பதிவாகி இருக்கிறது. முதல்கட்ட படப்பிடிப்பு பல்கேரியாவிலும் 2 ம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறுகிதாம். தொடர்ந்து படப்பிடிப்புக்கு பிறகு அக்டோபர் மாதம் இறுதி கட்ட பணிகள் தொடங்கும். இந்த படம் 2017 ஏப்ரல் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Ajith will start shooting for his 57th film, to be directed by Siruthai Siva. The movie would be shot extensively in Bulgaria for a 40 day schedule.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil