»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

ரஜினிகாந்த், கமலஹாசன், விஜய், பிரசாந்த், சிம்ரன், ஜோதிகா, மீனா என்று முன்னணி தமிழ் நடிகர்-நடிகைகள்மலேசியா மற்றும் சிங்கப்பூரில் நடந்த நட்சத்திரக் கலைவிழாவில் கலக்கிக் கொண்டிருந்த நிலையில் அதில் நடிகர்அஜித் மட்டும் கலந்து கொள்ளவில்லை.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இது போன்ற ஒரு நிகழ்ச்சியில் அஜித் கலந்து கொண்ட போது அவருக்கு ஏற்பட்டஒரு கசப்பான அனுபவமே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

நடிகர் சங்கக் கடனைத் தீர்ப்பதற்காகவும் நலிவடைந்த சினிமாக் கலைஞர்களுக்கு உதவுவதற்காகவும் மலேசியாமற்றும் சிங்கப்பூரில் நட்சத்திரக் கலைவிழா நிகழ்ச்சிகளை நடத்த நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்த் முடிவுசெய்தார்.

இதைத் தொடர்ந்து இது தொடர்பாக அனைத்து நடிகர்-நடிகைகளும் இந்தக் கலைவிழாவில் கலந்து கொள்ளவேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

ஜூலை 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் இந்தக் கலைவிழா நிகழ்ச்சிகளை நடத்துவதென்றும் இதை முன்னிட்டு 5நாட்களுக்கு சினிமா ஷூட்டிங் நடக்காது என்றும் அறிவிக்கப்பட்டது.

ரஜினிகாந்த், கமலஹாசன், விஜய், சிம்ரன், ஜோதிகா, மீனா என்று 53 முன்னணி தமிழ் நடிகர்களும் டான்ஸ் மாஸ்டர்கலா தலைமையில் 41 நடனக் கலைஞர்களும் கலைவிழாவில் கலந்து கொள்ளச் சம்மதித்தனர்.

இந்நிலையில் அஜித் மட்டும் இதில் கலந்து கொள்ளச் சம்மதிக்கவில்லை. ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு ஆதரவளிக்கும்பொருட்டு சில லகரங்களுக்கான "செக்"கை நடிகர் சங்கத்திடம் அளித்தார்.

அதை வாங்கிக் கொண்ட நடிகர் சங்கம் முதலில் சரி என்றது. ஆனால், மீண்டும் அஜீத்திடம் பேசிய விஜய்காந்த்நீங்கள் இந்த நிகழ்ச்சியில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்றார்.

ஆனால், நான் தான் எனது பங்கு பணத்தைத் தந்துவிட்டேனே. வேண்டுமானால் இன்னும் கூட தருகிறேன். கலைநிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாது என அஜீத் கூறிவிட்டார்.

அஜீத் வளர்ந்து வந்த நேரத்தில் இது போன்ற ஒரு பொது மேடையில் ஒரு முன்னணி நடிகையுடன் அஜீத் நடனம்ஆடினார். நிகழ்ச்சி முடிந்தபின்னர் விழாவை ஏற்பாடு செய்தவராலும் அந்த நடிகையாலும் அஜீத்அவமானப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதிலிருந்தே பொது மேடைகளில் கலை நிகழ்ச்சிகளில்பங்கேற்பதில்லை என்ற பாலிசி வைத்திருக்கிறார் அஜீத்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil