»   »  அஜித் சார் சொன்னது நடந்துடுச்சு! - 'விவேகம்' சிவா

அஜித் சார் சொன்னது நடந்துடுச்சு! - 'விவேகம்' சிவா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : விவேகம் படம் வெளியான அன்று அந்தப் படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் அதிகமாக வந்தன. இந்தப் படத்தை யூ-ட்யூப் விமர்சகர் ஒருவர் தரக்குறைவாக விமர்சித்ததற்கு சினிமாத் துறையில் உள்ள பலர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், படத்திற்கு வரும் விமர்சனங்களைப் பற்றி இயக்குநர் சிவா பேசியிருக்கிறார். அதுபற்றி சிவா கூறியதாவது, 'சிகரெட் பிடிப்பது, மது குடிப்பது மாதிரியான காட்சிகள் எதுவும் இல்லைனு பல பேர் பாராட்டியிருந்தாங்க.

Ajith sir statement was happened, says siva

படத்தின் ப்ளஸ், மைனஸ் பற்றி விமர்சிச்ச பல விமர்சனங்களை நான் பார்த்தேன். குறைகளாகச் சொல்லப்பட்டதையெல்லாம் நோட் பண்ணி வெச்சுருக்கேன். என்னை நானே மேம்படுத்திகிறதுக்கு அவையெல்லாம் தேவைப்படும். ஆனால், வேண்டுமென்றே திட்டமிட்டுக் குறை சொல்ற விமர்சனங்களை நான் பார்க்கலை.

தரக்குறைவாகப் பேசியவர்கள் மீது எந்த விதமான சட்ட நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை. ஒரு நல்ல படத்தின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.' எனக் கூறியிருக்கிறார் இயக்குநர் சிவா.

'உண்மையான உழைப்பு தோத்ததாக சரித்திரம் இல்லைனு அஜித் சார் சொன்னார். அது இப்போ பல எதிர்ப்புகளுக்கு இடையேயும் விவேகம் வெற்றிகரமா ஓடுறது மூலம் நிரூபணம் ஆகிட்டு வருது' என அவர் சிவா தெரிவித்துள்ளார்.

English summary
Director Siva opens about negative criticism of vivegam. Ajith sir's words 'Hardwork never fails' has become true, he added.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil